Beast : பீஸ்ட்டை போல் வெளிநாடுகளில் தடைவிதிக்கப்பட்ட தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ..!

Published : Apr 10, 2022, 11:25 AM IST

Beast : தமிழ் படங்களுக்கு வெளிநாடுகளில் தடை விதிக்கப்படுவது இது முதன்முறை அல்ல. இதற்கு முன் கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களும் தடையை சந்தித்துள்ளன.

PREV
14
Beast : பீஸ்ட்டை போல் வெளிநாடுகளில் தடைவிதிக்கப்பட்ட தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ..!

பீஸ்ட்டுக்கு தடை

விஜய் - நெல்சன் கூட்டணியில் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி உள்ள பீஸ்ட், வருகிற ஏப்ரல் 13-ந் தேதி ரிலீசாக உள்ளது. பான் இந்தியா படமாக வெளியாக உள்ளதால், இப்படத்திற்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும், எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த படத்துக்கு சில அரபு நாடுகளில் தடை விதிக்கப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல் சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதன் காரணமாக குவைத், கத்தார் போன்ற அரபு நாடுகளில் பீஸ்ட் படத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் துபாய், ஓமன், பஹ்ரைன் போன்ற அரபு நாடுகளில் இப்படத்திற்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை.

24

எஃப்.ஐ.ஆர்

இவ்வாறு தமிழ் படங்களுக்கு வெளிநாடுகளில் தடை விதிக்கப்படுவது இது முதன்முறை அல்ல. இதற்கு முன் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எப்.ஐ.ஆர் படத்துக்கும் கத்தார், குவைத் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் தடைவிதிக்கப்பட்டு இருந்தது. தீவிரவாதத்தை மையப்படுத்தி இப்படத்தின் கதை அமைந்திருந்ததால் அங்கு இப்படம் வெளியிடப்படவில்லை.

34

விஸ்வரூபம்

அதேபோல் கமல் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் படத்துக்கும் மலேசியாவில் தடை விதிக்கப்பட்டது. இப்படத்தில் தீவிரவாதம் பற்றிய காட்சிகள் இடம்பெற்று இருந்ததால் அங்கு இப்படத்தை வெளியிட அந்நாட்டு அரசு அனுமதிக்கவில்லை. இப்படம் தமிழ்நாட்டில் ரிலீசானபோதே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

44

கபாலி

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கபாலி படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டது. அந்த படத்தில் போதைக் கடத்தலை மையப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்ததால், அப்படத்துக்கு மலேசியா சென்சார் போர்டு சான்றிதழ் வழங்க மறுத்தது. பின்னர் சில காட்சிகளை நீக்க படக்குழு ஒப்புக்கொண்டதை அடுத்தே அப்படம் அங்கு வெளியிடப்பட்டது.

இதையும் படியுங்கள்... Beast movie :பீஸ்ட்டுக்கு ஆப்பு வைக்கும் அரபு நாடுகள்... குவைத்தை தொடர்ந்து மேலும் ஒரு நாட்டிலும் தடை விதிப்பு

Read more Photos on
click me!

Recommended Stories