அடுத்தடுத்து தோல்வி... என் படத்தை தயாரிக்க மறுத்து தயாரிப்பாளர் ஓடிவிட்டார் - பிரபாஸின் வாழ்வை மாற்றிய தருணம்

First Published | Aug 5, 2024, 2:42 PM IST

பாகுபலி மூலம் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்த நடிகர் பிரபாஸ் தன் வாழ்க்கையை மாற்றிய தருணம் பற்றி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

Prabhas

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். அவரை பான் இந்தியா நடிகராக உயர்த்திய திரைப்படம் பாகுபலி. ராஜமவுளி இயக்கிய அப்படத்தின் இரண்டு பாகங்களிலும் நாயகனாக நடித்திருந்த பிரபாஸுக்கு அப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடிப்பில் சலார், கல்கி 2898AD ஆகிய திரைப்படங்கள் பான் இந்தியா அளவில் ஹிட் அடித்தன.

Prabhas Life changing movie

பிரபாஸின் வாழ்க்கையை மாற்றிய படமாக பாகுபலி தான் இருக்கும் என நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் அது இல்லையாம். அதற்கு முன்னர் தனது வாழ்க்கையை மாற்றிய படம் குறித்து பிரபாஸே பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். ஈஸ்வர் படம் மூலம் தெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமானார் பிரபாஸ். ஆனால் அப்படம் தோல்வி அடைந்தது. இதையடுத்து ராகவேந்திரா என்கிற படத்தில் நடித்து வந்துள்ளார் பிரபாஸ். அப்படம் தயாரிக்கொண்டிருந்த சமயத்தில் மேலும் இரண்டு படங்களில் கமிட்டாகி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... விருது விழாவுக்கு இப்படியா டிரஸ் பண்ணிட்டு வர்றது! படு கிளாமரான ஆடையில் வந்த ஜோதிகா; விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்

Tap to resize

Varsham movie

ஆனால் ராகவேந்திரா படம் ரிலீஸ் ஆகி படுதோல்வி அடைந்துள்ளது. இப்படி அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்ததால், பிரபாஸின் மூன்றாவது படத்தை இயக்க இருந்த தயாரிப்பாளர், பிரபாஸுடன் பணியாற்ற விருப்பமில்லை என்று கூறி ஓடிவிட்டாராம். அந்த சமயத்தில் மிகவும் கஷ்டப்பட்டதாக கூறிய பிரபாஸ், கைவசம் உள்ள மற்றொரு படத்தில் நடித்துள்ளார். அந்த படம் தான் வர்ஷம். அப்படம் தான் பிரபாஸின் வாழ்க்கையை மாற்றிய படமாம்.

Trisha, prabhas

வர்ஷம் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு பிரபாஸின் கெரியரில் அடுத்தகட்டத்திற்கும் செல்ல உதவியது. தெலுங்கில் வர்ஷம் படம் அதிரிபுதிரியான வெற்றியை ருசித்ததால் அப்படத்தை தமிழிலும் ரீமேக் செய்தனர். அதில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படம் மழை என்கிற பெயரில் தமிழில் ரீமேக் ஆகி இங்கும் நல்ல வரவேற்பை பெற்றது.  

இதையும் படியுங்கள்... இயக்குனருக்கே தெரியாமல் மழை பிடிக்காத மனிதன் படத்தில் 2 நிமிட சீனை சேர்த்தாரா விஜய் ஆண்டனி? அவரே தந்த விளக்கம்

Latest Videos

click me!