50 வயசுலயும் எப்படி இவ்ளோ யங்கா இருக்காங்க.. அருண் விஜய் அக்கா அனிதா விஜயகுமாரின் நியூ கிளிக்ஸ்..

First Published | Aug 5, 2024, 1:17 PM IST

அருண் விஜய் அக்கா அனிதா விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Anitha Vijayakumar Latest Pics

பழம்பெரும் நடிகர் விஜயகுமாருக்கு 2 மனைவிகள் என்பது அனைவருக்கும் தெரியும். முதல் மனைவி முத்துக்கண்ணுக்கு பிறந்தவர்கள் தான் கவிதா, அனிதா, அருண் விஜய் ஆகியோர். விஜயகுமாரின் 2-வது மனைவியான நடிகை மஞ்சுளாவுக்கு பிறந்தவர்கள் தான் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர். 

Anitha Vijayakumar Latest Pics

விஜயகுமாரின் பிள்ளைகளில் அனிதாவை தவிர மற்ற அனைவரும் சினிமாவில் நடித்தவர்கள் தான். கவிதா விஜயகுமார் கூட கூலி என்ற படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்திருப்பார். அதன் பின்னர் அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. 

Tap to resize

Anitha Vijayakumar Latest Pics

ஆனால் விஜயகுமார் குடும்பத்தில் திரையில் நடிக்காத ஒரே மகள் என்றால் அது அனிதா விஜயகுமார் தான். திரையில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்த போது அவரின் அம்மா சம்மதிக்கவில்லை என்பதால் அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை.

Anitha Vijayakumar Latest Pics

மருத்துவராக இருக்கும் அனிதா விஜயகுமார் கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவருடன் கத்தார் நாட்டில் செட்டில் ஆன அவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். அனிதாவின் மகள் தியாவும் மருத்துவராக இருக்கிறார்.

Anitha Vijayakumar Latest Pics

கடந்த பிப்ரவரி மாதம் தான் தியாவுக்கு திலன் என்பவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. பல்வேறு திரைப்பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். ஹல்தி, திருமணம், திருமண வரவேற்பு, திருமணத்திற்கு பிந்தைய கொண்டாட்டங்கள் என பல புகைப்படங்கள் வைரலாகின.

Anitha Vijayakumar Latest Pics

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனிதா விஜயகுமார் அவ்வப்போது தனது போட்டோக்கள், தனது மகளின் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். மேலும் அவர் ஒரு மருத்துவர் என்பதால் ஆரோக்கிய வாழ்க்கை முறை குறித்த பல்வேறு அறிவுறைகளை வழங்கி வருகிறார். குழந்தை வளர்ப்பு முறை குறித்து பல டிப்ஸ்களை வழங்கி வருகிறார்.

Anitha Vijayakumar Latest Pics

இந்த நிலையில் தனது தோழிகளுடன் அனிதா விஜயகுமார் இத்தாலிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இதுதொடர்பான போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

Anitha Vijayakumar Latest Pics

மேலும் அவரின் பதிவில் “ இத்தாலியில் எனது தோழிகளுடன் ஜாலியாக இருந்தேன். ஒன்றாக சமைத்தோம், நடனமாடினோம், சிரித்தோம், ஷாப்பிங் செய்தோம். மிகவும் மகிழ்ச்சியான நாட்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Latest Videos

click me!