ஜோதிகா முதல்... கீர்த்தி சுரேஷ் வரை! ஃபிலிம் பேர் 2024 விருது விழா மேடையை அலங்கரித்த பிரபலங்கள்! போட்டோஸ்!

First Published | Aug 5, 2024, 1:02 PM IST

நேற்று நடந்த 69-ஆவது, பிலிம் ஃபேர் சவுத் 2024 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருது பெற்ற பிரபலங்கள் பற்றிய புகைப்பட தொகுப்பு இதோ..
 

69வது சோபா பிலிம் ஃபேர் விருதுகள் சவுத் 2024, நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் உள்ள ஜேஆர்சி கன்வென்ஷன் சென்டரில் பிரமாண்டமாக நடந்தது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள திரையுலகை சேர்ந்த ஏராளாமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதில் கடந்த ஆண்டு வெளியான, சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகள், குணச்சித்திர நடிகர், குழந்தை நட்சத்திரம், காமெடிநடிகர்கள் , தொழில்நுட்ப நடிகர்கள், பாடகர் - பாடகி என பல்வேறு பட்டியல்களில் கீழ் விருதுகள் கொடுக்கப்பட்டது.

பிரேம்ஜிக்கு பெண்ணே கொடுக்க கூடாதுனு சொன்னேன்..! மனம் மாறியது எப்படி? மாமியார் கூறிய தகவல்!

Tap to resize

தமிழில் கடந்த ஆண்டின் சிறந்த படமாக, நடிகர் சித்தார்த் நடித்து தயாரித்திருந்த சித்தா திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. மேலும் சிறந்த இயக்குனருக்கான விருதை அருண் குமாரும், நடிகருக்கான விருதை சித்தார்த்தும், நடிகைக்கான விருதை நிமிஷா விஜயனும், துணை நடிகைக்கான விருதை அஞ்சலி நாயரும் சித்தா படத்திற்காக பெற்றனர்.

சிறந்த நடிக்கைக்கான (Critics) விருதை, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஃபர்ஹானா படத்திற்காகவும், அபர்ணா தாஸ் டாடா படத்திற்காகவும் பெற்றனர். அதே போல் பொன்னியின் செல்வன் திரைப்படமும் சிறந்த பாடலாசிரியருக்கான விருது, ஒளிப்பதிவாளருக்கான விருது, கலை இயக்குனருக்கான விருதை தட்டி தூக்கியது.

உள்ளாடை தெரிய ஓவர் கவர்ச்சி.. கீர்த்தி சுரேஷால் பளபளவென்று மாறிய Filmfare Awards விழா - ஹாட் கிளிக்ஸ் இதோ!

மேலும் நடிகை ஜோதிகா நடிகர் மம்மூட்டியுடன் நடித்த காதல் தி கோர் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். மம்மூட்டியும் இந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். 

அதே போல் கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நடிகர் நானிக்கு ஜோடியாக நடித்த தசரா படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். இந்த படம் அதிக பட்சமாக 5 பிலிம் பேர் விருதுகளை பெற்றது.

காத்திருந்த பீஸ்ட் வில்லன்; கழட்டிவிட்டு சென்ற காதலி... பாதியில் நின்றுபோன ஷைன் டாம் சாக்கோவின் 2வது திருமணம்!

இன்னும் ஏராளமான திரைபிரபலன்கள் கலந்து கொண்டு, சிறப்பித்த இந்த ஃபிலிம் பேர் விருது நிகழ்ச்சி குறித்த போட்டோஸ், தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Latest Videos

click me!