விருது விழாவுக்கு இப்படியா டிரஸ் பண்ணிட்டு வர்றது! படு கிளாமரான ஆடையில் வந்த ஜோதிகா; விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்

First Published | Aug 5, 2024, 1:47 PM IST

சூர்யாவின் மனைவி ஜோதிகா, பிலிம்பேர் விருது விழாவில் கலந்துகொள்ள வந்தபோது அணிருந்திருந்த கவர்ச்சி ஆடை இணையத்தில் பேசுபொருள் ஆகி உள்ளது.

jyothika

நடிகர் சூர்யாவும், ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின் படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா, குழந்தைகள் வளர்ந்து பள்ளி செல்ல தொடங்கியதும் சினிமாவில் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை தொடங்கினார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ரோல்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

Actress jyothika

தமிழ் படங்களில் மட்டும் நடித்து வந்த ஜோதிகா, பின்னர் படிப்படியாக பாலிவுட் மற்றும் மலையாள படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். அண்மையில் மலையாளத்தில் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த காதல் தி கோர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. இதுதவிர இந்தியில் மாதவனுடன் ஷைத்தான் படத்தின் நடித்தார்.

Tap to resize

Suriya wife jyothika

பின்னர் ஸ்ரீகாந்த் என்கிற படத்தில் நடித்த ஜோதிகாவுக்கு தற்போது பாலிவுட்டில் தான் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதனால் குடும்பத்துடன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார் ஜோதிகா. சூர்யாவின் குழந்தைகளும் அங்கு தான் படித்து வருகிறார்கள். இதனால் சூர்யாவும் சென்னையில் இருந்து மும்பைக்கு குடியேறிவிட்டார்.

இதையும் படியுங்கள்... ஜோதிகா முதல்... கீர்த்தி சுரேஷ் வரை! ஃபிலிம் பேர் 2024 விருது விழா மேடையை அலங்கரித்த பிரபலங்கள்! போட்டோஸ்!

jyothika photos

தான் பாலிவுட்டில் பிசியானது மட்டுமின்றி தன் கணவரையும் படிப்படியாக பாலிவுட் பக்கம் இழுத்து வருகிறார் ஜோதிகா. அண்மையில் சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டில் தயாரிப்பாளராக அறிமுகமான சூர்யா, விரைவில் ஹீரோவாகவும் களமிறங்க இருக்கிறாராம். அவரை ஹீரோவாக வைத்து பாலிவுட்டில் ஒரு பிரம்மாண்ட படம் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

jyothika at filmfare awards

பாலிவுட் போனதும் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வரும் ஜோதிகா, சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற பிலிம்பேர் விருது விழாவுக்கு படு கவர்ச்சியான ஆடையில் வந்திருந்தது பேசு பொருள் ஆகி உள்ளது. உள்ளாடை தெரியும்படி மேலே பிளேசர் மட்டும் போட்டு கிளாமர் குயினாக எண்ட்ரி கொடுத்தார் ஜோதிகா.

அவரின் இந்த ஆடையை பார்த்த நெட்டிசன்கள் சிலர், விருது விழாவில் இப்படியா ஆடை அணிந்து வருவது என விமர்சித்து வருகின்றனர். விமர்சிப்பர்வர்கள் ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் இந்த ஆடையில் ஜோதிகா மிகவும் இளமையாக தெரிவதாக பாராட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... 69வது பிலிம்பேர் அவார்ட்ஸ் : விருதுகளை வென்று குவித்த சித்தா; ஏமாற்றம் அளித்த விடுதலை - முழு வின்னர்ஸ் லிஸ்ட்

Latest Videos

click me!