தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் இந்த பொங்கலுக்கு வெளியாகாது என உறுதியாகியுள்ளது. இருந்தாலும் பொங்கல் தினத்தை முன்னிட்டு தளபதி ரசிகர்கள் ஒரு பிரம்மாண்டமான கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை என்றாலே தமிழகத்தில் திரைப்படத் திருவிழாவும் களைகட்டும். குறிப்பாக, முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது ரசிகர்களின் உற்சாகம் இரட்டிப்பாகும். அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் போட்டியில் தளபதி விஜய்யின் பங்களிப்பு இருக்குமா என்று எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான தகவல் கிடைத்துள்ளது.
24
ஜனநாயகன் ரிலீஸ் இல்லை
தளபதி விஜய்யின் அரசியல் மற்றும் திரைப்பயண மாற்றங்களுக்கு இடையே, 'ஜனநாயகன்' திரைப்படம் இந்த பொங்கலுக்கு வெளியாகும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய நிலவரப்படி 'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தின் வருகைக்காகக் காத்திருந்த ரசிகர்களுக்கு இது சிறிய ஏமாற்றத்தைத் தந்தாலும், அந்த இடத்தை ஈடுகட்ட ஒரு பிரம்மாண்டமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
34
மீண்டும் திரையரங்குகளை ஆக்கிரமிக்கும் 'தெறி'
ரசிகர்களின் ஏமாற்றத்தைப் போக்கும் வகையில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்கள் தளபதியின் மாபெரும் வெற்றிப் படமான 'தெறி' மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாக, வரும் ஜனவரி 15 முதல் உலகம் முழுவதும் இப்படம் மீண்டும் திரையிடப்பட உள்ளது.
இயக்குநர் அட்லீ - விஜய் கூட்டணியில் உருவான முதல் படமான 'தெறி', விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான வசூல் சாதனை படைத்த படம்.ஜோசப் குறுவில்லா மற்றும் விஜய்குமார் ஐபிஎஸ் என தளபதி காட்டிய மாஸ் காட்டினாலே இப்போதும் தியேட்டர்கள் அதிரும்."ஜித்து ஜில்லாடி" முதல் "ஈனா மீனா டீக்கா" வரை அனைத்துப் பாடல்களும் மீண்டும் பெரிய திரையில் ஒலிக்கப்போவது ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாகும். தந்தை-மகள் பாசம் நிறைந்த படம் என்பதால், விடுமுறை தினமான பொங்கலுக்குக் குடும்பம் குடும்பமாக மக்கள் திரையரங்கிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.