மலேசியாவில் உள்ள புக்கிட் ஜலீல் மைதானத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் கலை விழாவில் ரஜினி கமல் கலந்துகொண்டபோது எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகராக வலம் வருகிறார் விஜய். இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாகவும் விஜய் இருக்கிறார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது அதை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிறார் விஜய். சினிமாவை விட்டு விலகிய பின்னர் முழு நேரமாக அரசியலில் ஈடுபட உள்ளார். இதற்காக தமிழக வெற்றி கழகம் என்னும் அரசியல் கட்சியை தொடங்கி வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார்.
24
ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்
சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்துள்ள விஜய் கடைசியாக நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். அப்படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார். வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் தேதி ஜனநாயகன் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஜனநாயகன் படக்குழு உள்பட ஏராளமான திரைப்பிரபலங்களும் பங்கேற்று உள்ளார்கள்.
34
மாஸ் காட்டும் தளபதி
மலேசியாவில் உள்ள புகழ்பெற்ற புக்கிட் ஜலீல் மைதானத்தில் தான் இந்த இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. மொத்தம் 80 ஆயிரம் இருக்கைகள் கொண்ட இந்த அரங்கம் முழுவதும் ஹவுஸ்புல் ஆகியுள்ளது. அந்த ஆடியோ லாஞ்சின் போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஒரு சிலர் இந்த கூட்டத்தை பார்க்கும் போது மலேசியா தளபதியின் கோட்டை போல இருப்பதாக புகழ்ந்து வருகிறார்கள்.
ஒரு சிலரோ ரஜினி கமலோடும் ஒப்பிட்டு வருகிறார்கள். கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் சங்கம் சார்பில் மலேசியாவில் நட்சத்திர விழா நடத்தப்பட்டது. அதில் ரஜினி கமல் இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அப்போது அவர்களைப் பார்க்க அந்த மைதானத்தில் பெரிய அளவில் கூட்டம் இல்லை. இந்த ஸ்டேடியம் காத்து வாங்கியது போல் இருந்தது. அந்த வீடியோவை தற்போது வைரல் ஆக்கி வரும் நெட்டிசன்கள். ரஜினி கமலால் வர வைக்க முடியாத கூட்டத்தை தளபதி விஜய் தனி ஒருவனாக வரவைத்து அந்த ஸ்டேடியத்தையே ஹவுஸ்புல் ஆக்கியுள்ளார் என ஒப்பிட்டு பேசி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.