தவெக-வில் நடிகர் கவுண்டமணி..? ஐயோ ராமா... விஜய்க்காக இந்த முடிவை எடுத்தாரா..?

Published : Dec 27, 2025, 05:05 PM IST

நடிகர் கவுண்டமணிக்கும் விஜய்க்கும் இடையே நெருங்கிய நட்பு உண்டு. இருவரும் தமிழ் சினிமாவில் ஒன்றாக ரசிகன், கோயம்பத்தூர் மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்துள்ளனர்.

PREV
13

விஜய் கட்சி தொடங்கியது முதல் குறிப்பாக இளைஞர்களும், பெண்களும் பலத்த ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு கட்சியினரும் தவெகவில் இணைந்து வருகின்றனர். செனஙகோட்டையன், நாஞ்சில் சம்பத் போன்றவர்கள் இணைந்துள்ள நிலையில் மேலும் பல கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் கவுண்டமணிக்கும் விஜய்க்கும் இடையே நெருங்கிய நட்பு உண்டு. இருவரும் தமிழ் சினிமாவில் ஒன்றாக ரசிகன், கோயம்பத்தூர் மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்துள்ளனர். இவர்களது காமெடி காட்சிகள் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றன. கவுண்டமணியின் கவுண்டர் டயலாக்குகளும், விஜயுடனான காமெடி டைமிங்கும் பேசப்பட்டன.

23

கவுண்டமணி பொதுவாக சினிமா வட்டாரத்தில் பெரிய நட்பு வட்டம் வைத்துக்கொள்ளாதவர். சத்யராஜ், மணிவண்ணன் போன்ற சிலருடன் மட்டும் நெருக்கம் காட்டுவார். ஆனால், விஜயுடன் அவருக்கு மரியாதையும், நட்பும் உண்டு. 2025 மே மாதம் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானபோது, விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கவுண்டமணியை ஆரத்தழுவி ஆறுதல் கூறினார். இது அவர்களுக்கிடையேயான உண்மையான உறவை காட்டியது. இரண்டு படங்களில் மட்டும் இருவரும் இணைந்து நடித்திருந்தாலும், விஜய் கவுண்டமணியை மதித்து நடந்துகொள்வதாகவும் பேசப்பட்டது.

நடிகர் விஜய் தொடங்கிய தவெகவில் தற்போது வரை பிரபலமான சினிமாத் துறையைச் சேர்ந்த நடிகர்களோ, நட்சத்திரங்களோ அதிகாரப்பூர்வமாக இணைந்து பொறுப்புகளில் இல்லை. விஜய் தவிர, கட்சியின் முக்கிய நிர்வாகிகள், இணைந்தவர்கள் பெரும்பாலும் அரசியல் பின்னணி கொண்டவர்கள் மட்டுமே. இந்நிலையில், விஜய் கட்சியில் கவுண்டமணி இணைந்து விட்டதாகக்கூறி அபிஷேக் கோபல்லா என்பவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

33

அதில், ‘‘ விஜய் தம்பிக்காகத்தான் இந்த முடிவை எடுத்தேன். தவெகவில் கவுண்டமணி. 2926 தேர்தல் களம் சூப்பராக இருக்கப்போகிறது. பழனிசாமி இத்தோட காலியாகப்போகிறார்’’ எனப் பதிவிட்டுள்ளார். அத்துடன் விஜய் நடிகர் கவுண்டமணிக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தும் புகைப்படமும் பகிரப்பட்டுள்ளது. உண்மை என்னவெனில் கவுண்டமணிக்கு விஜய் சால்வை அணிவிக்கும் புகைப்படம் ஒரிஜினல் அல்ல.  https://www.threads.com/@abhishekgopalla/post/DSt3nYIiquD?xmt=AQF0HdvmDjWMac0nEg0tPOjPHNKA558iOWiq5ph6BY1mfg 

அது தவெகவில் இணைந்தபோது செங்கோட்டையனுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்த படம். அதனை எடிட்டிங் செய்து கவுண்டமணி படத்தை ஒட்டி வைத்துள்ளனர். கவுண்டமணி உண்மையில் தவெகவில் இணையவில்லை.

பய நம்ம பய தான்... கொஞ்சமும் வெட்கப்பட மாட்டான்... அதுலயும் அவுத்து விடுறதுல மன்னன்'' என்கிற கவுண்டமணி டயலாக்குதான் மண்டைக்குள் ஒலிக்கிறது.

 ரீல் அந்துபோச்சுடா சாமி..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories