Published : Dec 27, 2025, 03:20 PM ISTUpdated : Dec 27, 2025, 03:45 PM IST
நடிகர் விஜய், மலேசியாவில் நடைபெறும் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள நண்பர் அஜித் போல் கோர்ட் சூட் அணிந்து வந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.
நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன், பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது. ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று நடைபெற்று வருகிறது. அங்குள்ள புக்கிட் ஜலீல் என்கிற மைதானத்தில் இந்த இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவை தளபதி திருவிழா என்கிற பெயரில் நடத்தி வருகிறார்கள்.
ஒரு கான்செட் போல் பிரம்மாண்டமாக நடக்கும் இந்த விழாவில் நடிகர் விஜயின் திரையுலக பயணத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய பாடல்கள் பாடப்பட இருக்கின்றன. இந்த இசை வெளியீட்டு விழாவுக்காக லோகேஷ் கனகராஜ், அட்லி, நெல்சன் உள்பட ஏராளமான திரைப்பிரபலங்கள் மலேசியாவில் முகாமிட்டுள்ளனர்.
22
நண்பர் அஜித் லுக்கில் விஜய்
நடிகர் விஜய் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் எந்த லுக்கில் வந்து கலந்து கொள்வார் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர். இந்த நிலையில் மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் வந்தது போல் கோட் சூட் அணிந்து வந்து மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார் விஜய்.
மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் தன்னுடைய ஆடை பற்றி அவர் பேசுகையில் இந்த விழாவுக்கு நண்பர் அஜித் போல் வரலாம் என முடிவு செய்து தான் கோட் சூட் அணிந்து வந்ததாக கூறினார். அதே ஆடையில் தற்போது ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிலும் விஜய் கலந்து கொண்டுள்ளார். இதைப் பார்த்து ரசிகர்கள் கடைசி படத்திலும் தன்னுடைய நண்பரைப் போல் விஜய் வந்துள்ளதாக ஒப்பிட்டு பேசி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.