500 கோடிக்கே அல்லல்படும் தமிழ் சினிமா... 1000 கோடி வசூலை அசால்டாக வாரிசுருட்டிய இந்திய படங்கள் என்னென்ன?

Published : Dec 27, 2025, 01:12 PM IST

1000 கோடி வசூல் என்பது இந்தி, தெலுங்கு, கன்னட படங்களுக்கு அசால்டான விஷயமாக மாறிவிட்டது. ஆனால் தமிழ் சினிமாவுக்கு 1000 கோடி வசூல் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

PREV
16
1000 Crore Collected Indian Movies

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் தான் உள்ளனர். அப்படி இருந்தும் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி வசூல் என்பது தமிழ் சினிமாவுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது. கோலிவுட் மட்டும் 1000 கோடி வசூல் செய்ய தடுமாறினாலும், மற்ற திரையுலகங்களான டோலிவுட், பாலிவுட், சாண்டல்வுட் ஆகியவை அசால்டாக ஆயிரம் கோடி வசூலை அடிச்சு தூக்கி வருகின்றன. வருடத்திற்கு ஏதாவது ஒரு ஆயிரம் கோடி வசூல் படங்கள் வந்துவிடுகின்றன. இதுவரை 1000 கோடி வசூல் அள்ளிய இந்திய படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

26
9. துரந்தர்

1000 கோடி வசூல் கிளப்பில் லேட்டஸ்டாக இணைந்த படம் துரந்தர். டிசம்பர் 5-ந் தேதி ரிலீஸ் ஆன இப்படத்தை ஆதித்யா தர் இயக்கி இருந்தார். இப்படத்தில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடித்திருந்தார். இதில் தமிழ் நடிகர் மாதவனும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இப்படம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றிநடை போட்டு வருகிறது.

36
8. கல்கி 2898AD

கல்கி 2898AD ஒரு பான் இந்தியா படமாகும். சயின்ஸ் பிக்சன் படமான இதை நாக் அஸ்வின் இயக்கி இருந்தார். இப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாகவும், தீபிகா படுகோன் ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். 2024-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 1042.25 கோடி வசூலித்திருந்தது. இப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார்.

7. பதான்

உலகளவில் 1000 கோடி வசூலை வாரிசுருட்டிய இந்திய படங்களில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு ரிலீஸ் ஆன பதான் 7-ம் இடத்தில் உள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1050.3 கோடி வசூலித்திருந்தது.

46
6. ஜவான்

1000 கோடி வசூலித்த ஒரே ஒரு தமிழ் இயக்குனர் என்றால் அது அட்லீ தான். ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.1148.32 கோடி வசூலித்திருந்தது. இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு போன்ற தமிழ் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

5. கேஜிஎஃப் சாப்டர் 2

கன்னட சினிமாவில் இருந்து முதல் 1000 கோடி வசூல் சாதனையை நிகழ்த்திய படம் கேஜிஎஃப் சாப்டர் 2. இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். கடந்த 2022-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படத்தில் யாஷ் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1215 கோடி வசூலித்து இருந்தது.

56
4. ஆர்.ஆர்.ஆர்

ராஜமெளலி இயக்கத்தில் 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் ரிலீஸ் ஆன ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 1230 கோடி வசூலித்து இந்த பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. இப்படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் ஹீரோவாக நடித்திருந்தனர்.

3. புஷ்பா 2

ஆயிரம் கோடி வசூல் கிளப்பில் இணைந்த மற்றொரு தென்னிந்திய படம் புஷ்பா 2. அல்லு அர்ஜுன் நடித்த இப்படத்தை சுகுமார் இயக்கி இருந்தார். இப்படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் ஒட்டுமொத்தமாக 1742.1 கோடி வசூலித்து இந்த பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளது.

66
2. பாகுபலி 2

2017-ம் ஆண்டு ராஜமெளலி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற பாகுபலி 2 திரைப்படம் இந்த பட்டியலில் 2-ம் இடத்தை பிடித்துள்ளது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1788.06 கோடி வசூலித்து இருந்தது. இப்படத்தில் பிரபாஸ், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

1. டங்கல்

அதிக வசூல் அள்ளிய இந்திய படங்களின் பட்டியலில் அமீர்கான் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு ரிலீஸ் ஆன டங்கல் திரைப்படம் தான் முதலிடத்தை பிடித்துள்ளது. நிதேஷ் திவாரி இயக்கிய இப்படம் உலகளவில் ரூ.1968.03 கோடி வசூலித்தது. இந்த வசூல் சாதனையை இதுவரை எந்த இந்திய படமும் முறியடிக்கவில்லை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories