நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது.
ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடைபெற இருக்கிறது. இந்த ஆடியோ லாஞ்சுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மலேசியாவில் உள்ள ஜலீல் என்கிற பிரம்மாண்ட மைதானத்தில் தான் இந்த இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இது விஜய்யின் கடைசி படம் என்பதால், இதன் இசை வெளியீட்டு விழாவை ஒரு கான்சர்ட் போல பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக 30க்கும் மேற்பட்ட பாடகர்கள் மலேசியாவிற்கு படையெடுத்து உள்ளனர். விஜய்யின் திரைப்பயணத்தில் உள்ள முக்கியமான பாடல்களை எல்லாம் அவர்கள் பாட உள்ளனர்.
24
படையெடுத்த பிரபலங்கள்
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் ஆர்வம் காட்டி உள்ளனர். குறிப்பாக நடிகர் விஜய்யின் உடன்பிறவா தம்பிகளும் தமிழ் சினிமாவின் லீடிங் இயக்குநர்களுமான லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அட்லீ ஆகியோரும் இந்த இசை வெளியீட்டு விழாவிற்காக மலேசியாவிற்கு ஜூட் விட்டுள்ளனர். இதுதவிர நடிகைகள் மமிதா பைஜு, பிரியாமணி, பூஜா ஹெக்டே, ஆண்ட்ரியா ஆகியோரும் இதில் கலந்துகொள்கின்றனர். நடிகர்கள் நரேன், நாசர் ஆகியோரும் இசை வெளியீட்டு விழாவுக்காக மலேசியா சென்றுள்ளனர்.
34
ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச் எப்போது ஆரம்பம்
ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாக இருக்கிறது. இதற்காக மதியம் 1 மணியில் இருந்தே ரசிகர்கள் மைதானத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். அந்த மைதானத்தில் மொத்தம் 80 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்க முடியுமாம். இதையடுத்து 3 மணி முதல் 6 மணி வரை விஜய்யின் கெரியரில் இடம்பெற்ற சிறந்த பாடல்களையெல்லாம், பாட இருக்கிறார்கள். இதையடுத்து மாலை 6 மணிக்கு ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச் ஆரம்பமாகிறது. அதில் அனிருத் ஜனநாயகன் பாடல்களை எல்லாம் மேடையில் பாட இருக்கிறார். இரவு 8 மணிக்கு மேல் விஜய் பேசுவார் என கூறப்படுகிறது.
ஜனநாயகன் ஆடியோ லாஞ்சை நேரலையில் பார்க்க முடியாது. ஏனெனில் அதற்கான உரிமையை ஜீ தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. அவர்கள் இந்த ஆடியோ லாஞ்சை வருகிற ஜனவரி 3 மற்றும் 4-ம் தேதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திட்டமிட்டு உள்ளனர். இதனால் இன்று நேரலையில் ஜனநாயகன் ஆடியோ லாஞ்சை எந்த சேனலிலும் பார்க்க முடியாது. அங்கிருப்பவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டாலும் அதற்கு ஸ்ட்ரைக் விழ வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச் பற்றிய அப்டேட்டுகள் சோசியல் மீடியாவில் வெளிவரும். அதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.