மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நிவின் பாலி. அவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகி உள்ள திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'. காதலை வித்தியாசமாகக் கூறும் படமாக இதை இயக்கி இருக்கிறார் ராம். நடிகர் சூரி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 'ஏழு கடல் ஏழு மலை' படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் பிக் ஸ்கிரீன் போட்டிப் பிரிவில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.
24
ராம் இயக்கத்தில் நிவின் பாலி
மம்மூட்டி நடித்த 'பேரன்பு' படத்துக்குப் பிறகு இயக்குனர் ராம், நடிகர் நிவின் பாலியுடன் இணைகிறார் என்பதால் 'ஏழு கடல் ஏழு மலை' மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. சிம்பு நடித்த 'மாநாடு' படத்தைத் தொடர்ந்து, நிவின் பாலியை ஹீரோவாக வைத்து, சுரேஷ் காமாட்சி வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தை தயாரித்துள்ளது. சில்வா சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றி உள்ள இப்படம் வருகிற மார்ச் மாதம் திரைக்கு வர உள்ளது.
இதையடுத்து டியர் ஸ்டூடண்ட் என்கிற படத்தில் நடித்து வருகிறார் நிவின் பாலி. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இதன் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிவின் பாலியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அவரின் அடுத்த படத்துக்கு ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோ படமான இதில் நிவின் பாலி நாயகனாக நடிக்கிறார்.
44
மல்டிவெர்ஸ் மன்மதனாக மாறிய நிவின் பாலி
ஆதித்யன் சந்திரசேகர் எழுதி இயக்கும் ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. நகைச்சுவை, அதிரடி, கற்பனை கலந்த பொழுதுபோக்கு படமாக இது உருவாகிறது. அனந்து எஸ். ராஜ் மற்றும் நிதிராஜ் ஆகிய புதுமுகங்கள் இணைந்து எழுதியுள்ளனர். அனீஷ் ராஜசேகரன் படைப்பாக்கத்தில் பங்களிக்கிறார். தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இது வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகி இருக்கிறது.