காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ஆம் தேதி திரைக்கு வந்த இந்தப் படம் வசூல் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் கவுண்டமணி அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.