800 ரூபாய்க்கு 10 பாட்டு; சீப் அண்ட் பெஸ்ட் இசையமைப்பாளராக வலம் வந்த தேவா!

Published : Feb 16, 2025, 12:19 PM IST

இசையமைப்பாளர் தேவா, வெறும் ரூ.800 வாங்கிக் கொண்டு பத்து பாடல்களை கம்போஸ் செய்து கொடுத்திருக்கிறாராம். அதன் பின்னணி பற்றி பார்க்கலாம்.

PREV
14
800 ரூபாய்க்கு 10 பாட்டு; சீப் அண்ட் பெஸ்ட் இசையமைப்பாளராக வலம் வந்த தேவா!
இசையமைப்பாளர் தேவா

இசைஞானி இளையராஜா தமிழ் திரையுலகில் கோலோச்சிய காலகட்டத்தில் அவருக்கு போட்டியாளராக களம் இறங்கி சாதித்து காட்டியது வெகு சிலரே. அவர்களில் ஒருவர் தான் இசையமைப்பாளர் தேவா. இவரது மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்ததற்கு முக்கிய காரணம் அவரது கானா பாடல்கள் தான். அந்த காலகட்டத்தில் அவர் போட்ட பாடல்கள் எல்லாம் இன்றளவும் இளைஞர்களின் வைப் மெட்டுக்களாக உள்ளது. அதனால் தேவாவின் இசைக்கு இன்றளவும் மவுசு இருக்கிறது.

24
சீப் அண்ட் பெஸ்ட் இசையமைப்பாளர்

குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் படங்களில் பயன்படுத்தப்படும் பழைய பாடல்கள் வைரல் ஹிட்டாகி வருகின்றன. இளையராஜாவுக்கு அடுத்தபடியாக தேவாவின் பாடல்கள் தான் தற்போதைய படங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக இளையராஜா காப்புரிமை கோரினாலும், தேவா தன் பாடல்களை பயன்படுத்திக் கொள்ள எந்தவித பணமும் வாங்க மாட்டேன் என பேட்டிகளிலேயே ஓப்பனாக கூறி இருக்கிறார். இப்படி பெரிதாக சம்பளம் வாங்காமல் அவர் இசையமைத்த படங்கள் ஏராளம் உள்ளன.

இதையும் படியுங்கள்... ரஜினிகாந்துக்கு 10 நிமிடத்தில் தேவா போட்ட சூப்பர் ஹிட் பாட்டு! எது தெரியுமா?

34
தேவாவின் தாராள மனசு

அந்த வரிசையில் வெறும் 800 ரூபாய் வாங்கிக் கொண்டு 10 பாடல்களை இசையமைத்து கொடுத்திருக்கிறார் தேவா. அதன் பின்னணியில் ஒரு குட்டி ஸ்டோரி இருக்கிறது. அது என்னவென்றால் ஒரு நாள் தேவாவை சந்திக்க ஒரு நபர் வந்திருக்கிறார். அவர் தேவாவிடம், சார் என்னிடம் மேல்மருவத்தூர் கோவில் பங்காரு அடிகளாரை பற்றி தான் 10 பாடல்களை எழுதி வைத்திருக்கிறேன். அதற்கு நீங்கள் மியூசிக் போட்டு தருகிறீர்களா என கேட்டிருக்கிறார். 

44
800 ரூபாய்க்கு 10 பாட்டு போட்ட தேவா

அதுமட்டுமின்றி அந்த 10 பாடல்களுக்கான தொகையை கொடுக்கும் அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை. என்னிடம் இவ்வளவு தான் இருக்கு என தான் சேர்த்து வைத்திருக்கும் 800 ரூபாய்யை கொடுத்திருக்கிறார். அதை வைத்துக் கொண்டு அந்த 10 பாட்டை கம்போஸ் செய்து தருமாறு கேட்டிருக்கிறார். அந்த பக்தரின் நிலைமையை புரிந்துகொண்ட தேவா, அவர் எழுதி வைத்திருந்த 10 பாடல்களுக்கும் மேற்கொண்டு பணம் வாங்காமல் 800 ரூபாயை மட்டும் வாங்கிக் கொண்டு கம்போஸ் செய்து கொடுத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்... இளையாராஜாவை விட தேவா எவ்வளவோ பெஸ்ட்: ஏனா அவர் ஒரு பண பைத்தியம்!

click me!

Recommended Stories