ரகசியமாய் நடந்தேறிய நிக்கி கல்ராணி – ஆதி எங்கேஜ்மென்ட்.. போட்டோஸ் உள்ளே..

First Published | Mar 26, 2022, 6:43 PM IST

கடந்த வியாழக்கிழமையா பிரபல நடிகர்களான நிக்கி கல்ராணி - ஆதி இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நிறைவடைந்துள்ளது. அதற்கான போட்டோஸும் வைரலாகி வருகிறது.

nikki galrani

மலையாள திரையுலகில் கலக்கி வந்த நிக்கி கல்ராணி, 2015-ம் ஆண்டு ஜீ.வி பிரகாஷ் நாயகனாக நடித்த த்ரில்லர் படமான டார்லிங் மூலம் அறிமுகமானார். இதையடுத்து வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் மற்றும் கலகலப்பு 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரின் தொடர் வெற்றி பிரபலமான நாயகிகளில் ஒருவராக இவரை மாற்றியது.

nikki galrani

டோலிவுட்டில் பிசியான  இருக்கும் ஆதி, தமிழில் அய்யனார், மிருகம், ஈரம் போன்ற மாறுபட்ட கதைக்களத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் தி வாரியர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

Tap to resize

nikki galrani

படப்பிடிப்பில் பிஸியாக வலம் வரும் இவ்விருவரும் காதலில் விழுந்துள்ளதாக கடந்தாண்டு முதலே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. நிக்கி கல்ராணி- ஆதி இருவரும் கடந்த 2015-ல் வெளியான யாகாவாராயினும் நா காக்க, 2017-ல் வெளியான மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்திருந்தரன்.

nikki galrani

கிசுகிசுப்புக்கு தீனி போடும் வகையில்  நடிகர் ஆதி வீட்டு நிகழ்ச்சியில் நிக்கி கல்ராணி கலந்துகொண்டார். அதோடு சமீபத்தில் இருவரும் ஒன்றாக ஏர்போர்ட் வந்த புகைப்படங்கள் வைரலாகி வந்தன.

nikki galrani -aadhi

இவர்களது காதல் விவகாரம் குறித்து இதுவரையும் எந்தவித பேட்டியில் தெரிவித்ததில்லை. அதே சமயம் இதற்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே ஆதிக்கும் நிக்கி கல்ராணிக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் கசிந்தன.

nikki galrani -aadhi

அதோடு மற்ற நட்சத்திர ஜோடிகள் போலல்லாமல்  எளிமையான முறையில் முதலில் நிச்சயதார்த்தை  நடத்தி முடித்துவிட்டு, பின்னர் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

nikki galrani -aadhi

அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று நிக்கி கல்ராணி - ஆதி இருவருக்கும் சென்னியில் நிக்கி தங்கியிருக்கும் பிளாட்டில் மிக எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. 

nikki galrani -aadhi

இந்த விழாவில் தெலுங்கு திரையுலக நண்பர்கள் சிலர் மட்டும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு விரைவில் இவர்களது திருமணம் குறித்த தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கமுக்கமாக நடைபெற்ற நட்சத்திர ஜோடியின் என்கேஜ்மண்ட் போட்டோஸ் வைரலாகிறது.

Latest Videos

click me!