‘நாளை வெளியாகும் கே ஜி எஃப் 2’ ட்ரைலர்..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

Kanmani P   | Asianet News
Published : Mar 26, 2022, 06:05 PM ISTUpdated : Mar 26, 2022, 06:16 PM IST

ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த யாஷ் நாயகனாக நடிக்கும்  கே ஜி எஃப் 2வின் ட்ரைலர் நாளை வெளியாகவுள்ளது.

PREV
18
‘நாளை வெளியாகும் கே ஜி எஃப் 2’ ட்ரைலர்..எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..
KGF 2

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2'.

28
KGF 2

இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, 250 கோடி ரூபாய் வசூலித்து இந்திய அளவில் சாதனை படைத்தது. இதனையடுத்து ‘கே ஜி எஃப் 2’  திரைப்படம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது.

38
KGF 2

இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்..

மேலும் செய்திகளுக்கு...பீஸ்ட் சாதனையை முறியடித்ததாக பந்தா காட்டிய KGF 2 - ராக்கி பாயின் போங்கு வேலைகளை போட்டுடைத்த தளபதி ரசிகர்கள்

48
KGF 2

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ராக் ஸ்டார் யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

58
KGF 2

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

68
KGF 2

புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் டீஸர் வெளியாகி 240 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. 

78
KGF 2

அண்மையில் வெளியான இப்படத்தின் பாடலும் மில்லியன் கணக்கிலான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்து வருகிறது. 

மேலும் செய்திகளுக்கு... KGF 2 : நீங்க அவன் குறுக்க போயிடாதீங்க சார்... பாடல் மூலம் விஜய்க்கு வார்னிங் கொடுக்கிறதா KGF 2 படக்குழு?

88
KGF 2

இந்நிலையில் ஆக்சன் ரசிகர்களுக்கிடையே பேரார்வத்தை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் முன்னோட்டம் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே நாளை வெளியாகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories