லிங்கா கொடுத்த தலைவலி..கபாலியில் உஷாரான ரஜினிகாந்த்..தயாரிப்பாளரிடம் போட்ட கண்டிஷன்.

Kanmani P   | Asianet News
Published : Mar 26, 2022, 05:31 PM ISTUpdated : Mar 26, 2022, 05:36 PM IST

படம் பிளாப் என்றால் முதலில் உருட்டப்படுவது ஹிரோஸின் தளி தான். அப்படி பல படங்களில் சிக்கிய ரஜினி, கபாலி படத்தில் நடிக்கும் முன் போட்ட சூப்பர் கண்டிஷன் குறித்த தகவல் கசிந்துள்ளது.

PREV
18
லிங்கா கொடுத்த தலைவலி..கபாலியில் உஷாரான ரஜினிகாந்த்..தயாரிப்பாளரிடம் போட்ட கண்டிஷன்.
annaatthe

அண்ணாத்தே :

ரஜினிகாந்தின் சமீபத்திய திரைப்படம் அண்ணாத்தே. சிவா இயக்கத்தில் வெளியாகியிருந்த இந்த படத்தை சான் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. டி இமான் இசையமைத்துள்ளார். நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.

28
rajinikanth

தங்கையாக கீர்த்தி சுரேஷ் :

குஷ்பூ, மீனா என 90களின் நாயகிகள் நடித்துள்ள இந்த படத்தில் தற்போதைய பிரபலம் கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக நடித்திருந்தார். இந்த படம் 200 கோடிகளுக்கு மேல் வசூலித்து மாஸ் வெற்றி பெற்றது.

38
rajinikanth

மீண்டும் சன் பிக்சர்ஸ் உடன் :

அண்ணாத்தே அதிரடி வெற்றியை அடுத்து மீண்டும் சன் பிக்சர்ஸுடன் கைகோர்த்துள்ளார் ரஜினிகாந்த். தலைவர் 169 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் அறிமுகத்தை வீடியோவாக வெளியிட்டிருந்தது தயாரிப்பு நிறுவனம். 

மேலும் செய்திகளுக்கு...RRR day1 collection: புதிய சாதனை படைத்த ராஜமவுலியின் ''ஆர்.ஆர்.ஆர்'' திரைப்படம்....ஒரே நாளில் 250 கோடி வசூல்!

48
rajinikanth

நெல்சன் இயக்கத்தில் :

அதன்படி ரஜினிகாந்தை பீஸ்ட் இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளது உறுதியானது. இதில் அனிரூத் இசையமைக்கவுள்ளார் எனபதும் அந்த வீடியோவில் தெளிவானது. அறிமுக வீடியோவில்  நிற கோட் சூட் அணிந்து ரஜினி மாஸ் லுக் கொடுத்திருந்தார்.

58
rajinikanth

இயக்குனர்களின் போட்டி :

இந்த 169 வது படத்தை இயக்குவதில் பிரபல இயக்குனர்கள் இடையே போரே நடைபெற்றது. இவ்வாறு இயக்குனர்களும், தயாரிப்பளர்களும் ரஜினியின் படத்தை உருவாக்குதல் நீ, நான் என போட்டியிட்டாலும் ஒரு காலகட்டத்தில் ரஜினியின் படங்கள் படு மோசமான தோல்வியை தழுவியுள்ளன.

68
rajinikanth

லிங்கா தோல்வி :

ராஜியின் தயாரிப்பில் உருவான பாபா படத்தை தொடர்ந்து பல படங்கள் பிளாப்பை சந்தித்தன. அவ்வாறு தோல்வியை தழுவிய படம் தான் லிங்கா. கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் அனுஷ்கா ரெட்டி, சோனாக்ஷி சின்கா, சந்தானம், ஜெகபதி பாபு ஆகியோர் நடித்திருந்தனர்.  லிங்காவை 100 கோடி பட்ஜெட்டில்ராக்லைன் என்டர்டைன்மென்ட் தயாரித்திருந்தது. இப்படம் மிக மோசமான தோல்வியை அடைந்ததால்

78
rajinikanth

விநியோஸ்தர்கள் மோதல் :

லிங்கா மண்ணை கவ்வியத்தால் விநியோஸ்தர்கள் படு மோசமான நஷ்டத்தை சந்தித்தனர்.பின்னர் ரஜினிக்கு சுத்துப்போட்ட அவர்கள் நஷ்டத்தை  ஈடுகட்ட பணம் கொடுக்குமாறு ரஜினியிடம் கோரிக்கை வைத்து பிரச்சனை செய்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு...Bayilvan Ranganath: பெண்களின் அந்தரங்கத்தை வெளியிடுவதால் கைதாகிறாரா பயில்வான்.? போலீசில் பரபரப்பு புகார்.!

88
kabali

கபாலியில் உஷாரான ரஜினி :

விநியோகஸ்தரின் பிரச்சனையால் அப்செட்டாக இருந்த ரஜினி இனி வரும் காலங்களில் இப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது என முடிவெடுத்துள்ளார். இதையடுத்து பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி படத்தில் ஓப்பந்தமாகும் முன்னர் தயாரிப்பாளரிடம் கண்டிஷன் போட்டுள்ளார். அதாவது படம் பிளாப் ஆனால் நீங்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்னிடம் எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என கூறியுள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories