Vanitha: என்ன கொடுமை? பச்சை லிப்ஸ்டிக் போட்டு பயமுறுத்தும் வனிதா.. பங்கமா கலாய்த்து கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

Published : Dec 26, 2021, 01:18 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு (Biggboss Tamil 5) பின், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஒரு கலக்கு கலக்கி வரும் வனிதா விஜயகுமார் (vanitha vijayakumar) ... தற்போது பச்சை கலர் லிப்ஸ்டிக் போட்டு கொண்டு, வித்தியாசமான லுக்கில் வெளியிட்டுள்ள புகைப்படம் வழக்கம் போல் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.  

PREV
17
Vanitha: என்ன கொடுமை? பச்சை லிப்ஸ்டிக் போட்டு பயமுறுத்தும் வனிதா.. பங்கமா கலாய்த்து கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாக வலம் வரும் வனிதா விஜயகுமார், அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் விதவிதமான வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

 

 

27

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆரம்பத்தில் கவனம் செலுத்திய இவருக்கு... அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிய துவங்கி விட்டது.

 

37

சமீபத்தில் கூட ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்ட உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டது. அதே போல்... மற்றொரு புறம் யூடியூப், பிஸ்னஸ் என அடுத்தடுத்த வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

 

47

மேலும் ஷூட்டிங் இல்லாத நாட்களில், தோழிகள் மற்றும் மகளுடன் வெளிநாடுகளுக்கு சென்று என்ஜாய் செய்து வருகிறார்.

 

 

57

இந்நிலையில், இவர் நேற்று பிரபல நடிகை அம்பிகா மற்றும் அவருடைய மகளுடன் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

 

67

இதில் அம்பிகா சிவப்பு நிற கிறிஸ்துமஸ் உடையில் உள்ளார். ஆனால் வனிதா பச்சை நிற உடையில்... அதற்க்கு ஏற்ற போல் பச்சை நிற லிப்ஸ்டிக் போட்டு வித்தியாசமான மேக்கப்பில் உள்ளார்.

 

 

77

சிலர் மிகவும் போட்டான மேக்கப்பில் போஸ் கொடுத்துள்ளார் என கூறி வந்தாலும், நெட்டிசங்கள் சிலர் பச்சை லிப்ஸ்டிக் போட்டு பயமுறுத்துவதாக பங்கமாக கலாய்த்து... கழுவி ஊற்றி வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

 

Read more Photos on
click me!

Recommended Stories