பல்லுபோன வயசுல பக்கோடா வா..! 2-வது மனைவி உடன் ஹனிமூன் சென்ற விஜய்யின் ‘ரீல்’ தந்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

First Published | Jul 12, 2023, 11:07 AM IST

கில்லி படத்தில் நடிகர் விஜய்க்கு தந்தையாக நடித்து பிரபலமான நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தனது இரண்டாவது மனைவி உடன் ஹனிமூன் சென்றபோது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ashish vidyarthi

இந்தி நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தியை பேமஸ் ஆக்கியது தமிழ் படங்கள் தான். தமிழில் தரணி இயக்கத்தில் வெளிவந்த தில் படம் மூலம் அறிமுகமான இவர், அடுத்தடுத்து அவரின் தூள், கில்லி போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். அதிலும் குறிப்பாக விஜய்யின் தந்தையாக இவர் நடித்து கில்லி படம் ஆஷிஷ் வித்யார்த்திக்கு மிகப்பெரிய அளவில் பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது.

Ashish Vidyarthi

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஆஷிஷ் வித்யார்த்திக்கு தற்போது 60 வயது ஆகிறது. தற்போது சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்ட அவர் சோசியல் மீடியாவில் படு பேமஸ் ஆகிவிட்டார். அதன்படி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள குக் கிராமங்களுக்கு சென்று அங்குள்ள உணவுகளை சுவைத்து அதனை வீடியோவாக பதிவிட்டு வருகிறார் ஆஷிஷ் வித்யார்த்தி.

இதையும் படியுங்கள்... ‘நா ரெடி’ டான்ஸ் வீடியோவால் ஜாதி சர்ச்சையில் சிக்கிய VJ ரம்யா.. ட்ரோல் செய்த நெட்டிசன்கள்..


ashish vidyarthi

சொந்த வாழ்க்கையை பொறுத்தவரை நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. ராஜோஷி என்பவரை திருமணம் செய்துகொண்டு 23 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த ஆஷிஷ் வித்யார்த்தி பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். இந்த தம்பதிக்கு 23 வயதில் அர்ஷ் என்கிற மகனும் உள்ளார். இதனிடையே கடந்த மாதம் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி திடீரென இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

ashish vidyarthi

அவர் அசாமை சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். 60 வயதில் தன்னை விட 10 வயது குறைந்த பெண்ணை ஆஷிஷ் வித்யார்த்தி மறுமணம் செய்துகொண்டது சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டது. இந்நிலையில், தனது இரண்டாவது மனைவியுடன் ஜாலியாக ஹனிமூன் சென்றிருக்கிறார் ஆஷிஷ் வித்யார்த்தி. இருவரும் இந்தோனேசியாவில் உள்ள பாலிக்கு ஹனிமூன் கொண்டாட சென்றபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் பல்லுபோன வயசுல பக்கோடா கேக்குதா என அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... தமிழகம் முழுவதும் பாத யாத்திரை... அரசியல் எண்ட்ரிக்கு முன் தளபதி விஜய் செய்ய உள்ள தரமான சம்பவம்

Latest Videos

click me!