Atlee
தமிழில் அடுத்தடுத்து 4 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த அட்லீ, தற்போது பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். இந்தியில் அவர் இயக்கி உள்ள முதல் படம் ஜவான். இப்படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நாயகனாக நடித்துள்ளார். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்த முன்னோட்டம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மிகவும் அதிகரித்துள்ளது. ஜவான் திரைப்படம் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருப்பதால் இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாக ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அந்த சாதனையை ஜவான் படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜவான் படத்திற்காக இயக்குனர் அட்லீ வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இது அட்லீக்கு பாலிவுட்டில் முதல் படமாக இருந்தாலும், அவரின் திறமையை பார்த்து வியந்துபோன ஷாருக்கான், அவருக்கு சம்பளத்தை வாரி வழங்கி இருக்கிறார். அதன்படி ஜவான் படத்திற்காக இயக்குனர் அட்லீக்கு ரூ.40 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் காஸ்ட்லி இயக்குனராக உருவெடுத்துள்ளார் அட்லீ. ஜவான் படத்தை ஷாருக்கான் தான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ரூல்ஸ் மீறிய நடிகர் விஜய்.. வைரலான வீடியோ.. தளபதி மீது அதிரடி ஆக்ஷன் எடுத்த போக்குவரத்து போலீசார்..!