அரைத்த மாவையே அரைக்கும் விதத்தில்... குடும்பங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து, விதவிதமான பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், ஒரு சில சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வேற லெவல் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரங்கள் என்றால், பாக்கிய லட்சுமி, கோபி, மற்றும் ராதிகா கதாபாத்திரங்கள் தான். இதைதொடர்ந்து இனியா, எழில், ராஜேஸ்வரி, செழியன் போன்ற கதாபாத்திரங்கள் உள்ளனர்.
பாக்கிய லட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கும் சுசித்ரா ஒரு நாளைக்கு சம்பளமாக 15,000 வாங்குகிறாராம். இவரை தொடர்ந்து கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ், ராதிகாவாக நடித்து வரும் ரேஷ்மா ஆகியோர் ஒரு நாளைக்கு 12,000 சம்பளமாக வாங்குகிறார்கள்.
இனியாவாக நடித்து வருபவர் 8,000 சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது. இந்த லிஸ்டில் அதிக பாசமாக சம்பளம் வாங்குவது பாக்கியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா என்பதும் தெரிகிறது.