மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணான நிஹாரிகாவும், சைதன்யாவும் விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியான தகவல், நீண்ட நாட்களாக தெலுங்கு மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் இதனை இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இருவருமே விரும்பி, புரிந்துணர்வுடன் விவாகரத்து செய்ததாக நிஹாரிகா அறிவித்தார். சைதன்யாவும் கிட்டத்தட்ட அப்படித்தான் கூறி இருந்தார்.