தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வந்த 'லியோ' படத்தின் படப்பிடிப்பை நேற்று நிறைவு செய்த நிலையில், உடனடியாக இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்களை சந்தித்து, அரசியல் வருகை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
vijay
இந்த சந்திப்பின் போது முதல் முறையாக தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து விஜய் பேசியுள்ளார். இதுகுறித்து இந்த மீட்டிங்கில் கலந்து கொண்ட நிர்வாகிகள் சிலர் கூறியுள்ளதாவது, தளபதி "அரசியலில் இறங்குவது என்றால், திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்னும், அரசியலில் மட்டுமே ஈடுபடுவேன் என தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர்.
விஜய் அதிரடியாக தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றிபேசியுள்ளதால், தளபதி 68 படத்திற்கு பின்னர் முழுமையாக திரையுலகில் இருந்து விலகுவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. விரைவில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பும் வெளியாகலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.