Super Fight League என்று அழைக்கப்படும் SFLலில் இவர் இதுவரை 12 முறை போட்டியிட்டுள்ளார், அதில் ஒன்பது முறை இவர் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இவரை தனது இறுதி சுற்று திரைப்படத்தில் நடிக்க வைத்தார். தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
மேலும் அந்த திரைப்படம் ரித்திகாவின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டது என்றால் அது மிகையல்ல. தற்போது ரித்திகா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
34
குறிப்பாக மலையாள திரை உலகின் முன்னணி நடிகராக திகழும் துல்கர் சல்மானின் "King of Kotha" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார். அதே சமயம் தற்பொழுது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள "கொலை" என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று உள்ளார்.
44
பாலாஜி குமார் இயக்கியிருக்கும் கொலை திரைப்படம் வருகிற ஜூலை 21ம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகள் பெரிய அளவில் நடந்து வரும் நிலையில் தனது பிரமோஷன் பணிகளுக்கு நடுவில் பிங்க் கலர் டிரஸ்ஸில் ஒரு அழகிய போட்டோஷூட் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரித்திகா.