Dhanush
திரையுலக பிரபலங்கள் பற்றி, சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத வகையில் பேசி, அடிக்கடி ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொள்ளும் பயில்வான் ரங்கநாதன் தற்போது, நடிகர் தனுஷ் - அமலாபால் குறித்து பேசியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அமலா பால் - தனுஷ் பற்றி பேசிய, செய்யாறு பாலு... அமலா பாலுடன் தனுஷ் நடித்த பின்னர், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தால்... இரண்டு மாதங்கள் வீட்டுக்கே வராமல் இருந்ததாகவும், இதுகுறித்து ஐஸ்வர்யா தந்தை ரஜினிகாந்திடம் முறையிட்ட போது, ரஜினிகாந்த் நேரடியாக அமலாபால் அப்பார்ட்மென்டுக்கு சென்று, அவர் குடும்பஸ்தன்... இனி உங்கள் இருவரை பற்றிய எந்த தகவலும் என் காதுக்கு வரக்கூடாது, என எச்சரித்து வந்ததாக கூறினார்.
Biggboss Tamil: பிக்பாஸ் சீசன் 7 எப்போது ஆரம்பம்? ஃபுல் ஃபாமில் கமல்ஹாசன்.. நாள் குறித்த விஜய் டிவி!
இவரை தொடர்ந்து, மீண்டும் தனுஷை பற்றி அலசி ஆராய்ந்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். தனுஷ் பற்றி அவர் பேசியுள்ளதாவது, "தனுஷ் தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு நடிகையை மாற்றிக்கொண்டே இருப்பார். அவர்களிடம் நன்கு வேலையை வாங்கி கொள்வார் என்றும், இவர் தான் பிரபல நடிகை ஒருவரின் விவாகரத்துக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் சிறு தீ பொறியாக கணவன் - மனைவிக்குள் புகைய துவங்கி, பின்னர் மிகப்பெரிய பிரச்சனையாக கொழுந்து விட்டு எரிய துவங்கியது. இதன் பின்னர் இருவரும் சேர்ந்து வாழ முடியாது என முடிவு செய்து விவாகரத்து வரை சென்றதாக கூறியுள்ளார். பயில்வான் ரங்கநாதனின் இந்த பேச்சு திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.