மாவீரன்
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் வருகிற ஜூலை 14-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக ஷங்கர் மகள் அதிதி நடித்துள்ளார். மேலும் மிஷ்கின், சரிதா, யோகிபாபு, சுனில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
மிஷன் இம்பாசிபிள் டெட் ரெகானிங் பாகம் 1
உலகளவில் ஆக்ஷன் ஹீரோவாக மிரட்டி வருபவர் டாம் குரூஸ். அவர் நடிப்பில் அதகளமான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் மிஷன் இம்பாசிபிள் 7. இப்படம் வருகிற ஜூலை 12-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு இந்தியாவிலும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளதால், பான் இந்தியா மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... ஒருவழியாக துருவ நட்சத்திரம் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஹாரிஸ் ஜெயராஜ்
பாபா பிளாக்ஷீப்
பிளாக்ஷீப் என்கிற யூடியூப் சேனல் டீம் ஒன்றாக இணைந்து உருவாக்கி இருக்கும் திரைப்படம் தான் பாபா பிளாக்ஷீப். இப்படத்தை ராஜ்மோகன் இயக்கி இருக்கிறார். இதில் அம்மு அபிராமி, ஆர்.ஜே.விக்னேஷ் காந்த், அப்துல் அயாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படமும் வருகிற ஜூலை 14-ந் தேதி திரைக்கு வர உள்ளது. ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் இப்படத்தை தயாரித்து உள்ளார்.