"சேது துவங்கி வணங்கான் வரை".. பாலா தமிழ் சினிமாவிற்கு தந்த சிறப்பான சில படங்கள் - ஒரு பார்வை!

Ansgar R |  
Published : Jul 11, 2023, 02:56 PM IST

இயக்குனர் பாலா தமிழ் சினிமாவிற்கு பாலு மகேந்திரா கொடுத்த ஒரு முத்து. இவர் திரைப்படங்கள் ஒவ்வொன்றும், அதில் நடித்த கலைஞர்களின் பெயரைத் தாண்டி இவருடைய பெயரை உரக்கச் சொல்லும். ஒரு திரைப்படத்தை பார்க்கும் பொழுதே இது பாலாவின் திரைப்படம் என்பதை சட்டென்று  சொல்லும் அளவிற்கு மிக மிக நேர்த்தியான கதை அம்சங்களைக் கொண்டது இவருடைய திரைப்படங்கள்.

PREV
13
"சேது துவங்கி வணங்கான் வரை".. பாலா தமிழ் சினிமாவிற்கு தந்த சிறப்பான சில படங்கள் - ஒரு பார்வை!

சேது.. இது பாலா இயக்கிய முதல் திரைப்படம், இந்த படத்திற்காக இவருக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் சிறந்த இயக்குனருக்கான விருதும் கிடைத்தது. தேசிய விருதும் கிடைத்தது, Filmfare விருதும் கிடைத்தது. 

கரடு முரடான ஒரு இளைஞன், கடுப்பானால் அடித்து விட்டு பிறகு பேசும் மிகப்பெரிய கோவக்காரன், ஆனால் அவனுக்கு, சத்தமாய் பேசினால் கூட பயப்படும் ஒரு மெண்மையான பெண்ணின் மீது காதல் ஏற்படுகிறது. இந்த காதலை அவளிடம், அவன் பாணியில் சொல்கிறான், ஆச்சர்யப்படும் வகையில் அவளும் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். இனி எல்லாம் சுகமே என்று என்னும்போது நாயகன் பைத்தியமாகிறான், அதை பார்த்த காதலி பிணமாகிறாள்.  

இந்த ஒரு திரைப்படம் சியான் விக்ரம் என்று இன்று உலகே போற்றும் ஒரு நடிகர் உருவாக காரணமாக இருந்தது என்றால் அது மிகையல்ல. 

ஒருவழியாக துருவ நட்சத்திரம் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஹாரிஸ் ஜெயராஜ்

23

நான் கடவுள்.. நம்மில் பல பேர் காசிக்கு சென்று வந்திருப்போம், அங்கு அமர்ந்து பிணங்களுக்கு மத்தியில் வாழ்க்கை நடத்தும் அகோரிகளையும் கண்டிருப்போம். ஆனால் அவர்களுடைய வாழ்க்கைமுறை எப்படி இருக்கும் என்பதை நம்மில் பலர் சிந்தித்துக் கூட பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அது இப்படித்தான் இருக்கும் என்பதை நம் கண் முன் மிக நேர்த்தியாக பாலா கொடுத்த ஒரு திரைப்படம் தான் நான் கடவுள். 

இந்த திரைப்படத்திற்காகவும் இவருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது, அதுவரை சாக்லேட் பாயாக வளம் வந்த ஆர்யாவை முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தில் காட்டிய திரைப்படம் நான் கடவுள். இந்த திரைப்படத்தில் தலைகீழாக நின்று ஆர்யா செய்யும் அந்த ஒரு ஆசனத்தை பற்றி பலமுறை பேட்டிகளில் வியந்து பேசியுள்ளார் பாலா என்பது குறிப்பிடத்தக்கது.

33

பரதேசி.. இந்த படம் வெளியானது 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஆனால் இந்த கதை மூலம் நம்மை சுமார் 50 ஆண்டுகள் முன்னோக்கி அழைத்து சென்றிருப்பார் பாலா. அதர்வா நடிப்பு இந்த படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. கூலி கிடைக்கும் என்று நம்பி ஒரு கூட்டம், கொத்தடிமைகளாக செல்கிறோம் என்பதையே உணராமல் செல்ல, சாகும் வரை அதே அவலம் தான் அந்த சந்ததிக்கே என்று பல உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு பாலா கொடுத்த படம் பரதேசி.  

சாய் தன்ஷிகா, வேதிகா மற்றும் ரித்விகா என்று பல நடிகைகளின் வேறொரு பரிமாணத்தை காட்டிய திரைப்படம் பரதேசி.

கோலிவுட் உலகின் சூப்பர் ஹிட் ஹீரோஸ்.. ஆனால் அந்த இடத்தை கோட்டைவிட்ட வாரிசு நடிகர்கள்!

Read more Photos on
click me!

Recommended Stories