தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த கவுதம் மேனன், தற்போது முழுநேர நடிகராக மாறிவிட்டார். இவர் கைவசம் எக்கச்சக்கமான படங்கள் உள்ளன. இவர் இயக்கத்தில் உருவாகி நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். இதில் சீயான் விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் டிடி, ராதிகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தற்போது துருவ நட்சத்திரம் படத்தின் பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியிடப்பட்ட ஒரு மனம் என்கிற பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதையடுத்து அடுத்த பாடல் எப்போது ரிலீஸ் ஆகும் என ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார் அப்படத்தின் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ்.
Dhruva natchathiram
அதன்படி துருவ நட்சத்திரம் படத்தின் செகண்ட் சிங்கிள் அடுத்த வாரம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறினார். அதேபோல் படத்தின் ரிலீஸ் தேதி இம்மாத இறுதியில் வெளியிட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. அது எந்த தேதியில் வெளிவரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... ஹாலிவுட் தரத்தில் RRR படத்தின் அடுத்த பாகம்.. ராஜமௌலியின் பிளான் என்ன? எழுத்தாளர் சொன்ன சீக்ரெட்!