தமிழகம் முழுவதும் பாத யாத்திரை... அரசியல் எண்ட்ரிக்கு முன் தளபதி விஜய் செய்ய உள்ள தரமான சம்பவம்

Published : Jul 12, 2023, 10:21 AM IST

அரசியல் எண்ட்ரிக்கு தயாராகி வரும் நடிகர் விஜய், தமிழகம் முழுவதும் பாத யாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
தமிழகம் முழுவதும் பாத யாத்திரை... அரசியல் எண்ட்ரிக்கு முன் தளபதி விஜய் செய்ய உள்ள தரமான சம்பவம்
vijay

நடிகர் விஜய் அரசியலில் நுழைய உள்ளது தான் தற்போது தமிழ்நாட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. அவர் எப்போது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அவர் அறிவிப்பை வெளியிடாவிட்டாலும், அதற்கான பணிகளை சைலண்டாக செய்துகொண்டு தான் இருக்கிறார். தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், தன்னுடைய மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து அவர்களுடன் அரசியல் வருகை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

24
vijay

நேற்று சென்னை பனையூரில் மக்கள் இயக்க பொறுப்பாளர்களுடன் நடைபெற்ற மீட்டிங்கில் தான் அரசியலுக்கு வந்துவிட்டால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடுவேன் என கூறினாராம் விஜய். முதன்முறையாக நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து ஓப்பனாக பேசி உள்ளதால் அவரது மக்கள் இயக்க நிர்வாகிகள் செம்ம குஷியாகி உள்ளனர். இன்றும் விஜய் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... முதல் முறையாக அரசியல் வருகை குறித்து அறிவித்த விஜய்! தளபதி நிர்வாகிகளிடம் பேசியது இது தான்!

34
vijay

இது ஒருபுறம் இருக்க, நடிகர் விஜய்யின் மற்றொரு திட்டம் அனைவருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக உள்ளது. அது என்னவென்றால், நடிகர் விஜய் விரைவில் தமிழகம் முழுவதும் பாத யாத்திரை செல்ல திட்டமிட்டு உள்ளாராம். அதுவும் லியோ பட ரிலீசுக்கு முன்னரே அவர் இந்த பாத யாத்திரையை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. மக்களை நேரடியாக சந்தித்து தனது அரசியல் எண்ட்ரியை அறிவிக்கவே விஜய் இந்த பிளானை போட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,

44

லியோ பட இசை வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ள விஜய், அந்த சமயத்தில் இந்த பாத யாத்திரையை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. விஜய் இப்படி அரசியல் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்வதை பார்த்தால் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்க உள்ள தளபதி 68 தான் அவரின் கடைசி படமாக இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியானதுபோல் தெரிகிறது.

இதையும் படியுங்கள்... ரூல்ஸ் மீறிய நடிகர் விஜய்.. வைரலான வீடியோ.. தளபதி மீது அதிரடி ஆக்‌ஷன் எடுத்த போக்குவரத்து போலீசார்..!

Read more Photos on
click me!

Recommended Stories