நடிகர் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டு உள்ளார். அப்படத்தை அவருக்கு பதிலாக மகிழ் திருமேணி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பும் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. இந்நிலையில், விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு நீதி கேட்டு #JusticeforVigneshShivan என்கிற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.
அஜித்தின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. அந்த சமயத்தில் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த உற்சாகத்தில் எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும். காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும். இப்படி ஒரு மிகப்பெரிய வாய்ப்பளித்த அஜித் சாருக்கு நன்றி. சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை” என பதிவிட்டிருந்தார் விக்கி.
இதையும் படியுங்கள்... அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்ட விக்கி... நயன்தாராவின் சமரச பேச்சுக்கும் செவி சாய்க்காத லைகா..?
அதுமட்டுமின்றி புத்தாண்டன்று கடந்தாண்டு நடந்த மறக்க முடியாத நிகழ்வுகள் சிலவற்றை தொகுத்து அதனை பதிவிட்டிருந்தார். அதில் அஜித்தின் ஏகே 62 படம் குறித்தும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருந்தார் விக்னேஷ் சிவன். இப்படி அஜித் படத்தை இயக்க ஆவலோடு காத்திருந்த விக்னேஷ் சிவனுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், திடீரென அவரை அப்படத்தில் இருந்து நீக்கிவிட்ட தகவல் அனைவருக்குமே பேரதிர்ச்சியாக உள்ளது.