ஆண்ட்ரியா
அரக்கோணத்தில் பிறந்தவர் நடிகை ஆண்ட்ரியா. இவரது முதல் தமிழ் படம் கண்ட நாள் முதல். கடந்த 2005 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்தப் படத்தில் பிரசன்னா மற்றும் லைலா முன்னணி ரோலில் நடித்திருந்தனர். இதில், ஆண்ட்ரியா கதாபாத்திரம் பேசப்படவில்லை.
பச்சைக்கிளி முத்துச்சரம்
இந்தப் படத்தைத் தொடர்ந்து 2007ல் திரைக்கு வந்த பச்சைக்கிளி முத்துச்சரம் இவரது கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது. தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, சகுனி, விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, அரண்மனை, பூஜை, தரமணி, துப்பறிவாளன், விஸ்வரூபம் 2, மாஸ்டர், அரண்மனை 3 என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
பிசாசு 2
நல்ல கதையை மட்டும் தேர்வு செய்து அதில் நடித்து வருகிறார். தற்போது அனல் மேலே பனி துளி, பிசாசு 2, கா, மாளிகை, நோ எண்ட்ரி என்று வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். இது தவிர பாபி ஆண்டனி மற்றும் தினேஷ் செல்வராஜ் ஆகியோர் இயக்கத்தில் 2 படங்களில் நடித்து வருகிறார்.
ஊ சொல்றியா மாமா
நடிகையாக மட்டுமின்றி சிறந்த பின்னணி பாடகியாகவும் திகழ்கிறார். அதோடு இசைக்கலைஞராகவும் இருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு திரைக்கு வந்த புஷ்பா படத்தில் ஆண்ட்ரியா பாடிய ஊ சொல்றியா மாமா ஊ சொல்றியா என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் பரவி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது.
திருமணம்
தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். சில படங்களுக்கு டப்பிங்கும் கொடுத்துள்ளார் என்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இப்படி பல திறமைகளை கொண்டுள்ள ஆண்ட்ரியா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது அவருக்கு 37 வயதாகிறது. ஆனால், திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருகிறார்.
ரீல்ஸ்
சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருப்பார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான புகைப்படங்களையும் தினந்தோறும் எடுக்கும் ரீல்ஸ் வீடியோக்களையும் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
3 மணிநேரம் காத்திருந்து எடுத்த போட்டோ
அப்படி இவர் எடுத்த புகைப்படத்திற்காக கிட்டத்தட்ட 3 மணி நேரம் வரையில் காத்திருந்ததாக கூறியுள்ளார். உண்மையில், காத்திருப்பது என்பது தனக்கு பிடிக்காது என்றும், தன்னை சார்ந்தவர்களுக்கு இது தெரியும் என்றும் அவர் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிசாசு 2
மிஷ்கின் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள பிசாசு 2 இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கா மற்றும் மாளிகை ஆகிய படங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால், இரு படங்களுமே முடிக்கப்பட்டுள்ளன.