நடிகர் ரஜினிகாந்த், தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜய் நடித்த பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் தான் ஜெயிலர் படத்தையும் இயக்கி வருகிறார். ரஜினியுடன் அவர் இணையும் முதல் படம் இது என்பதால், வித்தியாசமான கதையம்சத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது ஜெயிலர் திரைப்படம்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் ரஜினியுடன் ரம்யாகிருஷ்ணன், வஸந்த் ரவி, யோகிபாபு, ரோபோ ஷங்கர், தமன்னா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை, கடலூர், ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்திய படக்குழு அடுத்தகட்டமாக ராஜஸ்தானில் ஷூட்டிங்கை நடத்த உள்ளது.
இதையும் படியுங்கள்... அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்ட விக்கி... நயன்தாராவின் சமரச பேச்சுக்கும் செவி சாய்க்காத லைகா..?
ஜெயிலர் பான் இந்தியா படமாக தயாராகி வருவதால், இதில் பிறமாநில நடிகர்களையும் நடிக்க வைத்து வருகின்றனர். அதன்படி ஏற்கனவே மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமார் மற்றும் தெலுங்கு வில்லன் நடிகர் சுனில் ஆகியோர் இப்படத்தில் நடிக்க கமிட் ஆன நிலையில், தற்போது பாலிவுட் பிரபலம் ஒருவரையும் வில்லனாக களமிறக்கி உள்ளார் நெல்சன்.