அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்ட விக்கி... நயன்தாராவின் சமரச பேச்சுக்கும் செவி சாய்க்காத லைகா..?

Published : Jan 29, 2023, 09:36 AM IST

அஜித் நடிப்பில் உருவாக இருந்த ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில், தற்போது அவரை அப்படத்தில் இருந்து லைகா நிறுவனம் நீக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

PREV
14
அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்ட விக்கி... நயன்தாராவின் சமரச பேச்சுக்கும் செவி சாய்க்காத லைகா..?

நடிகர் அஜித்தின் ஏகே 62 படத்தின் இயக்குனர் மாற்றப்பட்ட விஷயம் தான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது ஷூட்டிங் தொடங்க இருந்த சமயத்தில் அப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

24

விக்னேஷ் சிவனுக்கு பதிலாக அப்படத்தை இயக்க மகிழ் திருமேணி கமிட் ஆகி உள்ளாராம். விக்னேஷ் சிவன் சொன்ன கதை திருப்திகரமாக இல்லாததன் காரணமாக அவரை இப்படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது விக்னேஷ் சிவன், அஜித் இருவருமே லண்டனில் தான் உள்ளனர். அங்கு லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் உடன் நடந்த காரசார விவாதத்துக்கு பின்னரே விக்னேஷ் சிவன் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... விக்னேஷ் சிவனை லைகா கழட்டிவிடுவது இது முதல்முறை அல்ல... 3 வருஷத்துக்கு முன் இதேபோல் நடந்த சம்பவம் தெரியுமா?

34

இடையே விக்னேஷ் சிவனின் மனைவி நயன்தாராவும் சமரசம் பேச முயன்றாராம். ஆனால் தங்களது முடிவில் உறுதியாக இருந்த லைகா நிறுவனம், நயன்தாராவின் சமரச பேச்சுக்கு செவி சாய்க்கவில்லையாம். முன்னதாக ஏகே 62 படத்துக்காக அஜித்திடம் கதை சொல்ல விக்கியை சிபாரிசு செய்ததே நயன்தாரா தான் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த வாய்ப்பு கைகூடாமல் போய் உள்ளதால் நயன்தாரா செம்ம அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. 

44

இருப்பினும் லைகா நிறுவனம் தரப்பிலோ, விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்தோ இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. அடுத்த சில தினங்களில் அஜித்தின் ஏகே 62 இயக்குனர் மாற்றப்படுவது குறித்து லைகா நிறுவனம் அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது. அந்த அறிக்கைக்காக தான் தற்போது கோலிவுட்டே காத்திருக்கிறது.

இதையும் படியுங்கள்... AK 62 படத்தை இயக்க வந்த திடீர் அழைப்பு... விஜய்காக எழுதிய கதையை அஜித்துக்கு சொல்லி ஓகே வாங்கிய பிரபல இயக்குனர்

Read more Photos on
click me!

Recommended Stories