பேஷன் ஷோவுக்கு தங்க நெக்லஸ் போட்டுட்டு வந்தது குத்தமா? நடிகை டாப்ஸியை ரவுண்டு கட்டி விளாசும் நெட்டிசன்கள்

First Published | Mar 22, 2023, 10:49 AM IST

பேஷன் ஷோவில் லட்சுமியின் உருவம் பதித்த தங்க நெக்லஸை அணிந்து ரேம்ப் வாக் வந்த நடிகை டாப்ஸியை நெட்டிசன்கள் திட்டித்தீர்த்து வருகின்றனர்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் டாப்ஸி. இவர் தமிழில் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வை ராஜா வை, அஸ்வின் சரவணன் இயக்கத்தில் கேம் ஓவர் போன்ற வித்தியாசமாக கதையம்சம் கொண்ட படங்களில் டாப்ஸி நடித்திருந்தாலும், அவரை பிரபலமாக்கியது பாலிவுட் தான். அங்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் டாப்ஸியும் இடம்பெற்று உள்ளார்.

குறிப்பாக கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களில் நடிக்க அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார் டாப்ஸி. தற்போது நடிகை டாப்ஸி கைவசம் ஜன கண மன என்கிற தமிழ் படம், டங்கி என்கிற இந்தி படம் உள்பட அரை டஜன் படங்கள் உள்ளன. இதில் ஜன கண மன படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் டாப்ஸி. இப்படத்தை அஹமத் இயக்குகிறார். அதேபோல் டங்கி படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார் டாப்ஸி.

இதையும் படியுங்கள்... எத்தனை மிமிக்ரி ஆர்டிஸ்ட் வந்தாலும், நீதான் நம்பர் 1 - கோவை குணா மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மதுரை முத்து

Tap to resize

இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் டாப்ஸி சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற பேஷன் ஷோவில் கலந்துகொண்டு ராம்ப் வாக் செய்தார். அதில் உள்ளாடை அணியாமல் படு கிளாமரான உடையணிந்து வந்து அதிர்ச்சி அளித்திருந்தார் டாப்ஸி. டாப்ஸியின் இந்த ரேம்ப் வாக் வீடியோவும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதோடு சர்ச்சையிலும் சிக்கி உள்ளது.

அந்த பேஷன் ஷோவுக்கு நடிகை டாப்ஸி அணிந்து வந்த நெக்லஸ் தான் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது. அந்த நெக்லஸில் லட்சுமியின் உருவம் இடம்பெற்று இருந்தது. கவர்ச்சி உடை அணிந்து இப்படி கடவுளின் உருவம் பொறித்த நகையுடன் ரேம்ப் வாக் வந்தது இந்து கடவுளை அவமதிக்கும் செயல் என்றும் நடிகையாக இருந்துகொண்டு இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்ளலாமா என நெட்டிசன்கள் டாப்ஸியை சாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... 4 நிமிஷம் ஆட்டி எடுத்துருச்சு... சுனாமிக்கு பின் இப்படி ஒரு நிலநடுக்கத்தை உணர்ந்ததாக குஷ்பு டுவிட்

Latest Videos

click me!