முன்னணி நடிகையாக வலம் வந்த போதே முன்னணி நடிகர்களின் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடி அசர வைத்தார் கிரண். அதன்படி சரத்குமாரின் அரசு படத்தில் இடம்பெறும் ஆளான தேகம் எங்கும் என்கிற பாடலிலும், விஜய்யின் திருமலை படத்தில் இடம்பெறும் வாடியம்மா ஜக்கம்மா என்கிற பாடலிலும், விஷாலின் திமிரு படத்தில் இடம்பெறும் மானாமதுரை பாடலிலும் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார் கிரண்.