இதற்கிடையில், 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில், வடிவேலுவின் மகளாக அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நாயகனாக நடிக்கும் வடிவேலுவுக்கு , சில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வரும் படம் இது. இப்படம் படப்பிடிப்பு நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது சிவாங்கி படம் தொடர்பாக சில வேலைகளுக்காக மைசூர் பறந்துவிட்டதாக தெரிகிறது. அவரது ஊடகப் பக்கத்தில் தனது சக நடிகர்களான ரெடின் கிங்ஸ்லி மற்றும் பிரசாந்த் ரங்கசாமி ஆகியோருடன் விமான நிலையத்திலிருந்து ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார். படத்தின் ஷூட்டிங்கிற்காகவா அல்லது படம் சம்பந்தமாக வேறு ஏதாவது வேலைக்காகவா என்று தகவல் இல்லை.