Published : Sep 16, 2022, 07:34 AM ISTUpdated : Sep 16, 2022, 03:30 PM IST
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படத்தின் காப்பி என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் சிம்பு நடிப்பில் வெளியாகி உள்ள படம் வெந்து தணிந்தது காடு. கவுதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் சிம்பு 20 வயது இளைஞனாக நடித்துள்ளார். இதற்காக 15 கிலோ உடல் எடையை குறைத்து நடித்திருக்கிறார் சிம்பு. இவருக்கு ஜோடியாக இளம் நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் நடிக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும்.
24
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சித்தார்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த இளைஞன் வேலைக்காக மும்பை சென்று, அங்கு எப்படி டான் ஆகிறார் என்பதே இப்படத்தின் கதைக்கரு. இதில் சிம்புவின் தாயாராக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். வழக்கமான கவுதம் மேனன் படம் போல் இல்லாமல் புதுவிதமான படமாக இது அமைந்துள்ளது.
நேற்று திரையரங்குகளில் ரிலீசான இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக சிம்புவின் நடிப்பு வேறலெவலில் உள்ளதாக அனைவரும் பாராட்டி வருகின்றனர். இப்படத்தின் கதை தற்போது வாழ்ந்து வரும் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் என எழுத்தாளம் ஜெயமோகன் சமீபத்திய பேட்டியில் கூறி இருந்தார்.
44
இந்நிலையில், இப்படம் கடந்த 1999-ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான நெஞ்சினிலே படத்தின் காப்பி என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இரண்டு படங்களின் கதையும் ஒன்று தான் என்று ஒப்பிட்டு டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். நெஞ்சினிலே படத்தை நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தான் இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக இந்தி நடிகை இஷா கோபிகர் நடித்திருந்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.