அதே போல் ஆசனூர் வனப்பகுதியில் மிகவும் பலவீனமான நிலையில் மீட்கப்பட்ட யானை குட்டி தான் அம்மு. இதனை அதனுடைய தாயுடன் சேர்க்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும், யானை குட்டிக்கு உடல் பலவீனமாக இருந்ததோடு, வயிறு வீங்கி காணப்பட்டது. மேலும் அந்த யானை குட்டியை பரிசோதித்த போது... பசி காரணமாக சில ஜல்லி கல்களை அது சாப்பிட்டதால், செரிமான தன்மை இல்லாமல், பால் மற்றும் உணவு எடுக்க மறுத்தது. பின்னர் அந்த யானை குட்டிக்கு உரிய சிகிச்சை அளித்து முதுமலை காப்பகத்திற்கு கொண்டு வந்து, பொம்மன் மற்றும் பெல்லியால் பராமரிக்கப்பட்டது.