வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள விடுதலை திரைப்படம் வருகிற மார்ச் 31-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. நடிகர் சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் நடித்துள்ள இப்படத்தை எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ நடித்துள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து உள்ளார்.
அதன்படி விடுதலை படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாம். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படங்களில் ஏ சான்றிதழ் பெறும் மூன்றாவது படமாக விடுதலை உள்ளது. இதற்கு முன் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த பொல்லாதவன், வடசென்னை ஆகிய படங்களுக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது விடுதலை படத்திற்கும் ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.