என் கணவரை பார்த்து தாத்தாவானு கேட்குறாங்க... மனம் நொந்து கண்ணீர் விட்ட நீலிமா ராணி..!

First Published | Apr 11, 2023, 9:28 PM IST

நடிகை நீலிமா ராணி, தன்னுடைய கணவரை பார்த்து... தாத்தாவா என்று கேட்பதாக மனம் நொந்து கண்ணீர் விட்டு பேசியுள்ளார் நீலிமா ராணி.
 

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரையிலும்... வெள்ளி திரையிலும் நடித்து பிரபலமானார் நீலிமா ராணி. கமல் ஹாசன் - சிவாஜி கணேசன் இணைந்து நடித்த, தேவர்மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமாவிற்கு, வெள்ளித்திரையில் கதாநாயகியாக ஜொலிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், கார்த்தியின் நான் மகான் அல்ல, ஜெயம் ரவியின் சந்தோஷ் சுப்ரமணியம், ஜோதிகாவின் மொழி, ராகவா லாரன்ஸின் ராஜாதி ராஜா போன்ற படங்களில் நடித்தார்.
 

வெள்ளித்திரை நாயகி கனவு, நீலிமாவுக்கு சோபிக்க வில்லை என்றாலும்... சின்னத்திரையில், சுமார் 25-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் வில்லியாக நடிப்பதில், இவரை மிஞ்ச ஆளே இல்லை என்றும் கூறலாம். குறிப்பாக நீலிமா நடிப்பில் வெளியான கோலங்கள், மெட்டி ஒலி, அரண்மனை கிளி போன்ற தொடர்களில் இவரது கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டன.

'அயோத்தி' படத்தை பார்த்து... சசிகுமாரை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்!
 

Tap to resize

நடிகை, தொகுப்பாளினி என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கும் நீலிமா மாறி சம்பீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், கண் கலங்கியபடி... தன்னுடைய கணவர் குறித்து உருக்கமாக பேசியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
 

serial actress neelima

நீலிமா ராணி, நீண்ட இடைவெளிக்கு பின்னர்... சமீபத்தில் கெளதம் கார்த்திக் நடிப்பில், இயக்குனர் பொன் குமார் இயக்கத்தில் வெளியான... ஆகஸ்ட் 16 1947 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் 5 நிமிடங்களுக்கு குறைவாகவே இருந்தலாலும், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த கேரக்டர் தனக்கு கிடைத்தது குறித்து நீலிமா பேசும் போது, இயக்குனர் பொன் குமார், நான் எடுத்த கர்ப்பகால போட்டோ ஷூட் புகட்டடத்தை பார்த்து விட்டு என்னை அணுகினார். மிகவும் முக்கியமான கதாபாத்திரம் என கூறினார். எத்தனை நாள் கால்ஷீட் என கேட்டபோது, ஒரு ஒரு நாள் போதும் என கூறி ஷாக் கொடுத்தார்.

சந்தானம் பட ஹீரோயினுக்கு இந்த நிலையா? மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் விஷாகா சிங்! ஷாக்கிங் போட்டோ

என்னுடைய அந்த ஒரே ஒரு நாள் ஷூட்டிங்கிற்காக எனக்கு குழந்தை பிறக்கும் வரைக்கும் காத்திருந்த இயக்குனர், நான் ஷூட்டிங்கிற்கு சென்ற பொது அரை நாளிலேயே என்னுடைய காட்சியை எடுத்து முடித்து விட்டார். இந்த சிறு கதாபாத்திரத்திற்கு கிடைக்கும் வரவேற்பு, உண்மையில் ஏதோ சாதித்தது போன்ற உணர்வை தருகிறது என பூரித்து பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய நீலிமா... தன்னுடைய கணவருடன் வெளியிடங்களுக்கு சென்றால், உங்கள் தாத்தாவா என கேட்பதாக மிகவும் வேதனையோடு பகிர்ந்துள்ளார். என்னுடைய கணவர் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தான் இருப்பர். செயற்கையாக, டை போன்றவற்றை அடித்து கொள்வதில் அவருக்கு விருப்பம் இல்லை. நானும் என் கணவர் அவருக்கு பிடித்தது போலவே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மற்றவர்களின் விமர்சனம் பற்றி எனக்கு கவலை இல்லை என்றாலும், யார் எந்த கருத்தை தெரிவிப்பதாக இருந்தாலும், அந்த கருத்தை தன்னை முன்வைத்தும், தன்னுடைய சந்ததியை முன்வைத்து பதிவு செய்ய வேண்டும் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

வயிற்றில் குழந்தையோடு கொழுக்கு... மொழுக்குன்னு இருந்த ஸ்ரேயாவா இப்படி? ஆச்சர்யடுத்தும் ட்ரான்ஸ்பர்மேஷன்!

Latest Videos

click me!