கிழிந்த பேன்ட்டில்... செம்ம மாடர்னாக கணவர் விக்கியுடன் மும்பை ஹோட்டலுக்கு விசிட் அடித்த நயன்! Exclusive போட்டோ

Published : Mar 05, 2023, 08:50 PM IST

நடிகை நயன்தாரா தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் மும்பை பாந்திராவில் உள்ளம் ரெஸ்டாரெண்ட் ஒன்றிற்கு வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ...  

PREV
18
கிழிந்த பேன்ட்டில்... செம்ம மாடர்னாக கணவர் விக்கியுடன் மும்பை ஹோட்டலுக்கு விசிட் அடித்த நயன்! Exclusive போட்டோ

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா, பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வரும் நிலையில், தன்னுடைய காதல் கணவருடன் மும்பையில் உள்ள ரெஸ்டாரன்ட் ஒன்றிற்கு வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

28

கேரளாவைச் சேர்ந்த நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 18ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில்,தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு கதாநாயகியாகவும், கதையின் நாயகியாக மட்டுமே நடித்து வருகிறார். 

'வாத்தி'-யாக வந்து வசூலில் வேட்டையாடிய தனுஷ்.! இத்தனை கோடியா? படக்குழு வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல் இதோ...

38

இவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதால், கோலிவுட் திரை உலகின் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்தை தன்வசமாக்கி உள்ள நயன்தாரா, கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட கால காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

48

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா, தற்போது தென்னிந்திய திரை உலகை தாண்டி பாலிவுட் திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார்.  நயன்தாராவை வைத்து 'ராஜா ராணி' படத்தை இயக்கிய இயக்குனர் அட்லீ, தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கியுள்ள ஜவான் படத்தில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

Exclusive: டீ - ஷர்ட் மற்றும் ஷார்ட்ஸில்.. மும்பையில் உள்ள கஃபேவுக்கு ஹாய்யாக வந்த சூர்யா! Exclusive போட்டோஸ்!

58

தமிழ் சினிமாவில் அட்லீ ஹிரோவாக அறிமுகமானபோது, நயன்தாராவின் செண்டிமெண்ட் ஒர்க்அவுட் ஆனது போலவே... பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் போதும் இவருடைய அதிர்ஷ்டம் அவருக்கு கை கொடுக்கும் என்பதனாலேயே... நயன்தாராவை கமிட் செய்துள்ளதாக சிலர் கூறி வருகின்றனர்.

68

தொடர்ந்து சினிமாவில் பிஸியாக வலம் வரும் நயன்தாரா கடந்த ஆறு மாதமாகவே ஒரு சில பிரச்சினைகளையும் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் திருமணமான நான்கே மாதத்தில் நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுக் கொண்டது மிகப்பெரிய பிரச்சினையாக வெடித்தது.  இதற்காக விசாரணைக் குழு அமைக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் அவர்கள் உரிய அனுமதி பெற்ற பிறகே அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி குழந்தைகள் பெற்றுக் கொண்டதாக கூறப்பட்டது.

'எதிர்நீச்சல்' சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணமா? காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி

78

இந்த பிரச்சனையில் இருந்து நயன்தாரா மீண்ட பிறகும், அடுத்தடுத்து சில பிரச்சினைகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.  குறிப்பாக நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து இயக்க இருந்த 62 ஆவது படம் அவருடைய கையை நழுவி போன நிலையில், நயன்தாராவும் பிரபல தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க இருந்த இரண்டு படங்கள் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.

88

எனினும் தற்போது தன்னுடைய அடுத்தடுத்த பட வாய்ப்புகளில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா, தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் மும்பையில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து வெளியே வரும்போது எடுக்கப்பட்ட எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மும்பையில் நயன்தாரா இருப்பதால், ஜவான் படத்திற்காக வந்தாரா? அல்லது வேறு ஏதேனும் படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories