'வாத்தி'-யாக வந்து வசூலில் வேட்டையாடிய தனுஷ்.! இத்தனை கோடியா? படக்குழு வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல் இதோ...

Published : Mar 05, 2023, 07:39 PM IST

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி'  திரைப்படம் 100 கோடி வசூல் சாதனை செய்துள்ளதாக பட குழு அதிரடியாக அறிவித்துள்ள நிலையில் இந்த தகவலை, தனுஷின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.  

PREV
14
'வாத்தி'-யாக வந்து வசூலில் வேட்டையாடிய தனுஷ்.! இத்தனை கோடியா? படக்குழு வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல் இதோ...

நடிகர் தனுஷ் நடிப்பில், கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி வெளியான திரைப்படம் 'வாத்தி'. பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இப்படத்தில், தனுசுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகையான சம்யுக்தா நடித்திருந்தார்.
 

24

தமிழ் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த போதிலும், சில இடங்களில் தெலுங்கு படத்தை பார்ப்பது போல் உணர்வு ஏற்படுவதாக கூறப்பட்டது. ஆனால்,  தெலுங்கு 'சார்' என்கிற பெயரில் வெளியான இப்படம், 'வாரிசு' படத்தை விட அதிக வசூல் செய்து, விஜய் படத்திற்கு டப் கொடுத்தது.

Exclusive: டீ - ஷர்ட் மற்றும் ஷார்ட்ஸில்.. மும்பையில் உள்ள கஃபேவுக்கு ஹாய்யாக வந்த சூர்யா! Exclusive போட்டோஸ்!

34

மாணவர்களுக்கு படிப்பு என்பது எந்த அளவிற்கு முக்கியம் என்கிற, சமூக கருத்தை வெளிப்படுத்தும் விதமாக இப்படத்தை இயக்கியிருந்தார் வெங்கி அட்லூரி. இந்த படத்தில் தனுஷ் கணக்கு வாத்தியாராக நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் சமுத்திரக்கனி தென்கருனாஸ் போன்ற பல முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

44

 இப்படம் வெளியாகி ஒரு மாதம் கூட இன்னும் ஆகாத நிலையில், தற்போது 'வாத்தி' திரைப்படம் 100 கோடி வசூல் சாதனை செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. தனுஷ் நடிப்பில் இதற்கு முன் வெளியான அசுரன், திருச்சிற்றம்பலம், போன்ற படங்கள் 100 கோடி வசூலை எட்டிய நிலையில்...  இப்படமும் அந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதை அடுத்து தனுஷின் ரசிகர்கள் உற்சாகமாக இந்த தகவலை கொண்டாடி வருகின்றனர்.

'எதிர்நீச்சல்' சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணமா? காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி

Read more Photos on
click me!

Recommended Stories