தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக இருக்கும் சூர்யா, சென்னையில் இருக்கும் போது அதிகம் வெளியே தலை காட்டாத நிலையில், மும்பையில் குடியேறியதும் ஷார்ட்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிந்து கொண்டு ஹாயாக மும்பை சாலையில் வலம் வரும் எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ் இதோ...
28
வாரிசு நடிகர் என்கிற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யா, தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில் நடிப்பு ரீதியாக பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான நிலையில்.. பின்னர் அனைவருமே ஆச்சரியப்படும் அளவிற்கு தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தினார்.
குறிப்பாக இயக்குனர் பாலா இயக்கத்தில் இவர் நடித்த நந்தா, பிதாமகன், போன்ற படங்கள் இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் கௌதம் மேனன், ஏ ஆர் முருகதாஸ் என தொடர்ந்து முன்னணி இயக்குனர்கள் படங்களில் நடித்தார்.
48
இவர் நடிப்பில் கடந்த 2020ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான 'சூரரை போற்று' திரைப்படத்தில் நடித்த சூர்யாவின் நடிப்பில், அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை குவித்தது மட்டும் இன்றி, சிறந்த நடிகருக்கான தேசி விருதையும் பெற்று தந்தது.
ஒரு பக்கம் ஹீரோவாக நடிகர் சூர்யா பிஸியாகி இருந்தாலும், மற்றொருபுறம் தரமான கதைகளை தேர்வு செய்து தயாரித்து வருகிறார். அந்த வகையில் இவர் தயாரித்த ஜெய் பீம், சூரரை போற்று, கார்கி, போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை குவித்தது.
68
சூர்யா இயக்குனர், பாலா இயக்கத்தில் நடித்து வந்த 'வணங்கான்' திரைப்படம் கைவிடப்பட்ட நிலையில், தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துவரும் 42-வது படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ள வாடிவாசல் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சூர்யா தன்னுடைய மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகள் தியா மற்றும் தேவ் ஆகியோருடன் மும்பையில் குடியேறியதாக தகவல் வெளியானது.
88
இதை தொடர்ந்து தற்போது சூர்யா சென்னையில் இருக்கும்போது அதிகம் வெளியே தலை காட்டாத நிலையில், மும்பைக்கு குடியேறியதும் டி-ஷர்ட் மற்றும் ஷார்ட் அணிந்து ஹாயாக கஃபேவுக்கு வந்த போது எடுத்த எக்ஸ்கியூஸ் புகைப்படங்கள் இதோ...