தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தங்களது நான்காம் ஆண்டு திருமண நாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த சிறப்பான நாளை முன்னிட்டு, தங்கள் குடும்பத்துடன் எடுத்த சில அழகான மற்றும் இதுவரை பார்த்திராத புகைப்படங்களை நயன்தாரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
29
திருமணம்
2022-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணம், சினிமா வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக இருந்தது.
39
நான்காம் ஆண்டு
இந்நிலையில், இன்று தங்களது நான்காம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும் இந்த ஜோடி, தங்களின் இரட்டை ஆண் குழந்தைகளான உயிர் மற்றும் உலகுடன் வெளிநாட்டில் விடுமுறையைக் கழித்து வருகின்றனர்.
இந்த அழகிய தருணங்களை வெளிப்படுத்தும் வகையில், நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "Happy Anniversary to Us" என்று பதிவிட்டு, தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
59
ரசிகர்கள் குஷி!
இந்தப் புகைப்படங்களில், விக்னேஷ் சிவனை அன்புடன் முத்தமிடும் காட்சியும், குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வலம் வரும் தருணங்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
69
நானும் ரௌடிதான்
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 2015-ம் ஆண்டு வெளியான ‘நானும் ரௌடிதான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போதுதான் முதன்முதலில் சந்தித்துக்கொண்டனர். அந்த நட்பு காதலாக மலர, பல ஆண்டுகால காதலுக்குப் பிறகு 2022-ல் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு வாடகைத்தாய் முறை மூலம் உயிர் மற்றும் உலகு என்ற இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
89
வைரல்
இந்த புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகின.
99
திருமண நாள் வாழ்த்துகள்!
த்ரிஷா, சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இந்த அழகான குடும்பத்திற்குத் தங்களது மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். அவர்களோடு சேர்ந்து நாமும் நமது திருமண நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.