துரை செந்தில்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 81 ஆவது படம்! போஸ்டருடன் வெளியான அறிவிப்பு!

First Published | Nov 18, 2022, 8:30 PM IST

நடிகை நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு, அவர் அடுத்ததாக நடிக்க உள்ள 81 ஆவது படம் குறித்த தகவலை, படக்குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியிட்டுள்ளது.
 

நடிகை நயன்தாரா தன்னுடைய சொந்த நிறுவனமான, 'ரௌடி பிச்சர்ஸ்' நிறுவனத்தின் சார்பில், அடுத்ததாக நடிக்க உள்ள 81 ஆவது படம் குறித்த அறிவிப்பு அவருடைய 38 ஆவது பிறந்தநாளான இன்று வெளியாகியுள்ளது.  ரௌடி பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த படத்தை, தமிழில்... எதிர் நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் போன்ற தரமான படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் இயக்க உள்ளார், இந்த படம் குறித்து அதிகார பூர்வ தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில் விரைவில் படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Nayanthara: நொடிக்கு நொடி திரில்... மிரள வைக்கும் நயன்தாராவின் 'கனெக்ட்' டீசர்..! ரிலீஸ் தேதியுடன் வெளியானது!

Tap to resize

மேலும் இந்த படம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்... தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் இந்த படத்தின் இயக்குனர் துரை  செந்தில்குமார், குறித்து கூறியுள்ளதாவது... 'தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனித்துவம் வாய்ந்த, உன்னதமான கதைகளை துரை செந்தில் குமார் இயக்கி வருவதாகும் , இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இவரின் படங்களில், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் கதை அமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக எதிர்நீச்சல் படத்தில்  சாந்தி கதாபாத்திரம் யாராலும் மறக்க முடியாத ஒன்று. எனவே அவருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். இந்த படம் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பும், இந்த படத்தின் போஸ்டரும் வெளியாகி நயன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

யாராவது என்னை கிள்ளுங்கள்! இது கனவு இல்லையே? பொன்னியின் செல்வன் ஒட்டு மொத்த வசூலை பார்த்து பிரமித்த விக்ரம்!

Latest Videos

click me!