மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நயன்தாரா, மோகன்லால், மம்மூட்டி, ஃபஹத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த பேட்ரியாட் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி உள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.
மலையாள சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால், 18 வருஷங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் படம் தான் பேட்ரியாட். அதுவும், கதை சொல்வதில் தனக்கென ஒரு ஸ்டைலைக் கொண்டிருக்கும் புது தலைமுறை டைரக்டர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில். கூடவே ஃபஹத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா, ரேவதி, ராஜீவ் மேனன் என நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடிச்சிருக்கு. நம்முடைய அன்றாட வாழ்க்கையை சுலபமாக்கும் டெக்னாலஜி, எப்படி எல்லாம் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என எச்சரிக்கை கொடுக்கும் படம் தான் 'பேட்ரியாட்'. அப்படம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
24
பேட்ரியாட் பட கதை
மத்திய அரசில் முன்னாள் அறிவியல் ஆலோசகராக இருந்தவர் டாக்டர் டேனியல் ஜேம்ஸ். இந்த கதாபாத்திரத்தில் மம்மூட்டி வருகிறார். வேலையில் எப்போதும் நேர்மையைக் கடைப்பிடிப்பவர். டெக்னாலஜியைத் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க முயற்சிப்பவர். ஆனால், நாட்டின் பல முக்கிய திட்டங்களுக்கு மூளையாக இருந்த அவர், ஒரு கட்டத்தில் நாட்டுக்கு வேண்டாதவராகிறார். அதிகார மையங்கள் தனக்கு எதிராகத் திரும்பும்போது, தப்பிப்பது மட்டும் அவர் நோக்கமல்ல. தன் மனசாட்சிக்குச் சரி என்று தோன்றும் சில முக்கிய வேலைகளையும் அவர் முடிக்க வேண்டியுள்ளது. அதற்காக டேனியல் ஜேம்ஸ் எடுக்கும் முயற்சிகள்தான் 'பேட்ரியாட்' படத்தின் கதை.
34
பேட்ரியாட் படம் எப்படி இருக்கு?
மம்மூட்டியை அவரது நிஜ வயதுக்கு ஏற்ற, மிகச் சிறந்த ஒரு கதாபாத்திரத்தில் காட்டிய படம் இது. டெல்லியின் அதிகார வர்க்கத்தில் வேலை செய்பவரின் தோற்றமும் உடல்மொழியும் மம்மூட்டிக்கு பக்காவாகப் பொருந்திப் போகிறது. இது அவர் இதுவரை செய்யாத ஒரு கதாபாத்திரம். மோகன்லாலுக்கும் இது சில புதிய விஷயங்களைக் கொண்ட கதாபாத்திரம். ரசிகர்களுக்கு கைதட்டல் மொமென்ட்ஸ் குறைவாக இருந்தாலும், அப்படிப்பட்ட சில தருணங்கள் படத்தில் இருக்கின்றன. நயன்தாராவும் தனக்கு கொடுத்த கேரக்டரை கச்சிதமாக செய்திருக்கிறார்.
திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் பேட்ரியாட் திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே வசூலில் மாபெரும் சாதனை படைத்திருக்கிறது. இப்படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ.29 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது. இப்படம் கேரளாவில் மட்டும் ரூ.8 கோடி வசூலித்திருக்கிறது. இந்த ஆண்டில் மிகப்பெரிய ஓப்பனிங் பெற்ற மலையாள படம் என்கிற சாதனையை பேட்ரியாட் படைத்துள்ளது. சொல்லப்போனால் தனுஷின் கர படம் இதற்கு போட்டியாக தான் ரிலீஸ் ஆனது. அப்படம் வெளியாகி 2 நாட்கள் ஆகியும் இன்னும் 20 கோடியை எட்டவில்லை. ஆனால் பேட்ரியாட் முதல் நாளே 29 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய ஓப்பனிங் பெற்றுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.