கொசு சத்தத்தில் இருந்து உருவான TMS பாடல்... எவர்கிரீன் ஹிட் அடித்த கதை தெரியுமா?

Published : May 02, 2026, 11:21 AM IST

சிவாஜி கணேசனின் படத்திற்காக டிஎம் செளந்தரராஜன் பாடிய பாடல் ஒன்று கொசு சத்தத்தில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்ப்போம்.

PREV
14
TMS Song Secret

தமிழ் சினிமாவில் பாடல்களுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. அப்படிப்பட்ட பாடல்களை உருவாக்குவதில் இசையமைப்பாளர்கள் எந்த அளவுக்கு உழைக்கிறார்களோ, அதே அளவு அப்பாடல்களுக்காக உழைக்கும் மற்றொரு ஜீவன் என்றால் அது பாடகர்கள் தான். பல ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலரின் குரல் மட்டும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு காந்த குரலுக்கு சொந்தக்காரர் தான் டி.எம்.செளந்தரராஜன். அவரின் குரலில் வந்த பாடல்கள் அனைத்துமே பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தன. அதில் ஒரு பாடலைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

24
டிஎம்எஸ் பாடல் ரகசியம்

டிஎம்எஸ் மற்ற பாடகர்களைப் போல் அல்லாமல், ஒரு பாடலை மெருகேற்ற என்னவெல்லாம் செய்ய வேண்டும் என மெனக்கெடுவாராம். குறிப்பாக இசையமைப்பாளர்களிடம் பல ஐடியாக்களை அள்ளிவீசுவாராம் டிஎம்எஸ். அப்படி அவர் சொல்லும் ஐடியாக்களை எல்லாம் பயன்படுத்தும் இசையமைப்பாளர்களில் எம்.எஸ்.விஸ்வநாதனும் ஒருவர். இதன்காரணமாகவே எம்.எஸ்.வி-யை டிஎம்எஸ்-க்கு ரொம்ப புடிக்குமாம். இவர்கள் கூட்டணியில் ஏராளமான ஹிட் பாடல்கள் உருவாகி இருக்கின்றன. அதில் ஒரு பாடல் தான் திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற பாட்டும் நானே பாவமும் நானே என்கிற ஹிட் சாங்.

34
டிஎம்எஸ் செய்த மாற்றம்

அந்த பாடலின் சிச்சுவேசன் என்னவென்றால், ஒரு கடவுள் அவதாரம் விறகு வெட்டியாக வந்து பாட வேண்டும். உள்ளே இருக்கும் தியாகராய பாகவதரை மடக்கும் வகையில் பாடும் பாடல் தான் அது. இந்தப் பாடலின் சிச்சுவேசனை கேட்டதும், இந்தப் பாடலை ஏன் நேரடியாக பாட வேண்டும் என கேட்ட டிஎம்எஸ், ஒரு ஐடியாவை கொடுத்திருக்கிறார். சிவாஜி திறந்த வெளியில் படுத்திருக்கிறார். அப்போது அவரை கொசு கடிக்கிறது. கொசு சத்தத்தில் இருந்து அப்பாடலை ஆரம்பித்து, பின்னர் அதில் கர்நாடக இசையை கொண்டுவரலாக என சொல்லி இருக்கிறார்.

44
அடிபொலி ஹிட் அடித்த பாட்டு

பின்னர் அப்படியே தன்னுடைய குரலில் பாடியும் காட்டி இருக்கிறார் டிஎம்எஸ். அதைக் கேட்டதும் படக்குழுவினர் செம ஹாப்பியாகி இருக்கிறார்கள். சிவாஜியே அதை மிகவும் ரசித்தாராம். அவர் பாடியதை அப்படியே படத்தில் வைக்குமாறு சொன்னாராம். இப்படி ஒவ்வொரு பாடலில் சின்ன சின்ன மாற்றங்களை செய்து அதை மெருகேற்றிவிடுவாராம் டிஎம்எஸ். இதனால் தான் அவரின் பாடல்கள் காலம் கடந்து கொண்டாடப்படும் விதமாக இருக்கின்றன என கூறுகிறார்கள். அவர் மறைந்தாலும் அவரின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories