பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதி தன் மருமகள்கள் ராஜி மற்றும் மீனா உடன் சென்னைக்கு கிளம்பி இருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில் கோமதி, ராஜி, மீனா மூவரும் சென்னைக்கு செல்வதற்காக ஆயத்தம் ஆகிறார்கள். ராஜி அவருடைய அப்பா, அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்காக வீட்டிற்கு செல்கிறார். அதன்பின்னர் பாட்டியிடமும் ஆசிர்வாதம் வாங்கிட்டு ராஜி கிளம்பும்போது, அங்கிருந்த முத்துவேல், ஏன் சித்தப்பாகிட்ட ஆசிர்வாதம் வாங்கல என ராஜியை கேட்க, அதற்கு அவர், எனக்கு ஆசிர்வாதம் பண்ண அவருக்கு விருப்பம் இல்லனு நினைச்சேன் என சொல்லிவிட்டு, தன் சித்தப்பா, சித்தி காலில் விழுகிறார்.
24
ஆசிர்வாதம் வாங்கும் ராஜி
நீ நல்லா பரிட்சை எழுதி பாஸ் ஆகிட்டு வா என ஆசிர்வாதம் பண்ணி அனுப்புகிறார். மறுபுறம் மீனா, ராஜி மற்றும் கோமதி ஆகியோர் ஒன்றாக சேர்ந்து டிஸ்கஸ் பண்ணுகிறார்கள். அப்போது மீனாவின் அம்மா அங்கே வருகிறார். நீங்க எல்லாரும் சென்னைக்கு போய் ஹோட்டலில் தங்கக் கூடாது என்றும், அங்கு தன்னுடைய அண்ணன் வீடு இருக்கிறது. அங்க போய் தங்குங்க. நீங்க ஹோட்டல்ல போய் தங்குனா அவங்க ரொம்ப வருத்தப்படுவாங்க என்று சொல்கிறார். மீனாவும், ராஜியுடம் வெளிய போயிட்டா உங்களால தனியா இருக்க முடியாது என கோமதியிடம் சொல்கிறார்.
34
கோமதியின் முடிவால் அப்செட் ஆன மீனா
எங்க அண்ணன் வீட்டுல நிறைய பேர் இருப்பாங்க, அவங்க கூட இருந்தா நீங்க பாட்டுக்க, பேசிக்கிட்டு ஜாலியா இருக்கலாம் என மீனாவின் அம்மா சொன்னதும், சரி நாங்க உங்க அண்ணன் வீட்டுக்கே போறோம் என சொல்லிவிடுகிறார். அதன்பின்னர் கிச்சனுக்குள் சென்ற கோமதியிடம் தனியாக பேச வரும் மீனா, நீங்க ஏன் அங்க போக சம்மதிச்சீங்க என கேட்கிறார். எங்க மாமா ஃபேமிலி பத்தி எனக்கு தான் தெரியும் என சொல்லி புலம்புகிறார். இதனால் சென்னை போன பின்னர் கோமதிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.
இதையடுத்து அனைவரும் சென்னை செல்வதற்காக தங்களுக்கு தேவையான பொருட்களை எல்லாம் பேக்கிங் பண்ணுகிறார்கள். இறுதியாக எல்லாரும் பொருட்களை எடுத்துக் கொண்டு கிளம்புவதற்காக ஹாலுக்கு வர, கோமதி மட்டும் தன்னுடைய கணவருக்கு அட்வைஸ் மழை பொழிகிறார். ஒழுங்கா நேரத்துக்கு மாத்திரை போடணும், சரியா சாப்பிடணும் என கூறுகிறார். அதன்பின்னர் ஒருவழியாக சென்னைக்கு கிளம்புகிறார்கள். இனி அடுத்த வாரத்தில் இருந்து அழகே அழகு குடும்பத்துடன், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மகா சங்கமம் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளது. அதில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.