சுமார் 19 வருடங்களாக திரையுலகில் முன்னணி ஹீரோயினாக நிலைத்து நிற்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. காரணம் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு தங்களை நடிகைகள் அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி, பல்வேறு சச்சை மற்றும் சவால்களை கலந்து சாதித்தவர் தான் நடிகை நயன்தாரா.
மேலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், ஒரு சில காரணங்களால் அந்த படங்களில் இருந்து விலகியதாகவும் கூறப்பட்டது.
அதே போல், நயன்தாராவின் காதல் கணவர் விக்னேஷ் சிவன்... அஜித்தின் துணிவு படம் ரிலீஸ் ஆன பின்னர், அஜித்தை வைத்து இயக்க காத்திருந்த நிலையில், அஜித் விக்கி கூறிய கதை பிடிக்கவில்லை என கூறி, இப்படத்தி இருந்து விக்கியை தூக்கி எறிந்துவிட்டு, மகிழ் திருமேனியை இயக்குனராக ஒப்பந்தம் செய்தார்.
இது ஒருபுறம் இருக்க, நயன்தாரா கிலோ கணக்கில்... தங்கம் மற்றும் வைர நகைகள் அணிந்து, பேரழகு பொருந்திய மகாராணி போல் ஜொலிக்கும் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த புகைப்படங்கள்... நகை விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.