கையில் சரக்கு பாட்டில் உடன் தசரா புரமோஷனுக்கு வந்து... நானி உடன் குடித்துவிட்டு ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்

Published : Mar 22, 2023, 02:20 PM IST

மும்பையில் நடைபெற்ற தசரா படத்தின் வீடியோ பாடல் வெளியீட்டு விழாவிற்கு கையில் சரக்கு பாட்டிலை எடுத்து வந்து நடிகை கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

PREV
17
கையில் சரக்கு பாட்டில் உடன் தசரா புரமோஷனுக்கு வந்து... நானி உடன் குடித்துவிட்டு ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் தசரா. தெலுங்கில் உருவாகி உள்ள இப்படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய உள்ளனர்.

27

தசரா படத்தில் நடிகர் நானிக்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இப்படம் வருகிற மார்ச் 30-ந் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கி உள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்.

37

தசரா படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் தற்போது அப்படத்திற்கான புரமோஷன் பணிகளும் படு ஜோராக நடைபெற்று வருகின்றன. கீர்த்தி சுரேஷ் மற்றும் நானி இருவருமே தசரா புரமோஷனில் கலந்துகொண்டு உள்ளனர்.

இதையும் படியுங்கள்...  இடுப்பை வளைத்து நெளித்து... சேலையில் கிளுகிளுப்பாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன் - கிக்கான கிளாமர் கிளிக்ஸ் இதோ

47

அந்த வகையில் இன்று உகாதி திருநாளை முன்னிட்டு தசரா படத்தில் இருந்து தூம் தாம் என்கிற பாடலின் வீடியோவை ரிலீஸ் செய்வதற்காக மும்பையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் நானியும் கீர்த்தி சுரேஷும் கலந்துகொண்டனர்.

57

இதில் நடிகர் ராணாவும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். தசரா பட டிரைலரில் நானி சரக்கு பாட்டிலை வாயில் வைத்து கல்பாக அடிக்கும் படியான காட்சி இடம்பெற்று இருக்கும். அதைப்போலவே இந்த புரமோஷன் நிகழ்விலும் செய்து காட்டியுள்ளார் நானி.

67

அப்போது அங்கு சரக்கு பாட்டில் உடன் வந்த கீர்த்தி சுரேஷ், நானிக்கு போட்டியாக அவரது ஸ்டைலிலேயே சரக்கு பாட்டிலை எடுத்து குடித்ததை பார்த்து அங்கிருந்தவர்கள் ஷாக் ஆகினர். பின்னர் தான் அந்த பாட்டிலில் மது இல்லை வெறும் குளிர் பானம் தான் இருந்தது என தெரியவந்தது.

77

இதையடுத்து அங்கு வந்திருந்தவர்களுக்கு அந்த குளிர்பானத்தை வழங்கி உற்சாகப்படுத்தினார் கீர்த்தி சுரேஷ். இந்த விழாவில் தூம் தாம் பாடலுக்கு நானியும் கீர்த்தி சுரேஷும் நடனமும் ஆடினர். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. 

இதையும் படியுங்கள்...  நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மரணம்..? தீயாக பரவிய வந்தைக்கு முற்றுப்புள்ளி வைத்த வீடியோ!

Read more Photos on
click me!

Recommended Stories